புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2015

ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்கத் தயார்: வடகொரியா அதிபர்


தங்கள் நாட்டின் இறையாண்மையை தக்கவைப்பதற்காக ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்க தயார் என வடகொரிய அதிபர் கூறியிருப்பது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா அவ்வப்போது அணுகுண்டுகளை சோதித்து வருவது வழமை.
இந்நிலையில் வடகொரியாவின் அதிபரான கிம் ஜோங் உன், வரலாற்று சிறப்பு மிக்க ராணுவத் தளத்தை பார்வையிட்டார்.
அப்போது ராணுவத்தினரிடம் பேசிய கிம் ஜோங் உன், தங்களது நாட்டின் இறையாண்மையை தக்க வைத்துக் கொள்ள ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்க தயார் என தெரிவித்துள்ளார்.
இத்தகவலை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ளது.

ad

ad