புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2023

கனடாவின் அமைச்சராக கரி ஆனந்தசங்கரிநியமிக்கப்பட்டுள்ளார்

www.pungudutivuswiss.com
கனேடிய அமைச்சரவை அமைச்சராக இலங்கை தமிழர் நியமனம் | Gary Anandasangaree
ஈழத் தமிழர் சரித்திரத்தில் அதி உச்ச வரலாற்றுப் பதிவு
-----------------------------------------------------------------------
இலங்கை தமிழன் வெளிநாடு ஒன்றில் அமைச்சராக பதவி ஏற்கும் முதலாவது வரலாறு இதுவாகும் எந்தவித விருப்பு வெறுப்பு இன்றி ஹரியை பாராட்டி வாழ்த்துவோமாக கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சராக முதல் தடவையாக இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் சிரேஸ்ட தமிழ் அரசியல்வாதியான வீ.ஆனந்த சங்கரியின் புதல்வர், கரி ஆனந்தசங்கரி சற்றுமுன்னர் பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி பாரியளவில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்துள்ளது.


லிபரல் கட்சி அமைச்சரவையில் மாற்றம்

கனேடிய லிபரல் கட்சியின் உறுப்பினரான கரி ஆனந்தசங்கரி ஸ்காப்ரோ ராக் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக  கடமையாற்றி வருகின்றார்.கரி ஆனந்தசங்கரி

ad

ad