-

3 ஜூன், 2026

பாஜகவில் பரபரப்பு: அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா! [Wednesday 2026-06-03 07:00]

www.pungudutivuswiss.com

பாஜகவில் இருந்து விலகும் முடிவில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளார். இன்று பாஜக மேலிட தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இந்த விஷயத்தை அண்ணாமலை தெரிவித்தார். அதோடு தமிழக பாஜகவினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்துள்ளார். இதையடுத்து உடனடியாக டெல்லி வரும்படி நயினார் நாகேந்திரனுக்கு மேலிடம் அதிரடி உத்தரவிட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை.

பாஜகவில் இருந்து விலகும் முடிவில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளார். இன்று பாஜக மேலிட தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இந்த விஷயத்தை அண்ணாமலை தெரிவித்தார். அதோடு தமிழக பாஜகவினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்துள்ளார். இதையடுத்து உடனடியாக டெல்லி வரும்படி நயினார் நாகேந்திரனுக்கு மேலிடம் அதிரடி உத்தரவிட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை

இவர் பாஜகவில் இருந்து விலகி புது கட்சி தொடங்குவதில் உறுதியாக உள்ளார். இந்நிலையில் தான் டெல்லி சென்ற அண்ணாமலை இன்று முதலில் பாஜக செயலாளர் (அமைப்பு) பிஎல் சந்தோஷ், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ஆகியோரை சந்தித்தார். அதன்பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது பாஜகவில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். தன்னை அங்கீகரித்து மாநில தலைவர்பதவி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். அதுமட்டுமின்றி தனது உழைப்புக்கு பாஜகவில் உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று மனவருத்தத்தையும் அண்ணாமலை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் மேலிட தலைவர்கள் அண்ணாமலையை சமாதானம் செய்துள்ளனர். அவரது ராஜினாமாவை ஏற்காத அவர்கள் காத்திருங்கள். கட்சியில் உரிய அங்கீகாரம் மற்றும் பதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். ஆனால் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினம் மேலிட தலைவர்கள் சொன்னதால் இன்று சென்னை புறப்பட வேண்டிய அண்ணாமலை டெல்லியிலேயே தங்கி உள்ளார். இதற்கிடையே தான் பாஜக மேலிடம் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை உடனடியாக டெல்லி வரும்படி அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவர் நாளை பாஜக தலைவர் நிதின் நபின் மற்றும் அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்து அண்ணாமலை மேலிட தலைவர்களிடம் புகார்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டுள்ளார். இதனால் தமிழக பாஜகவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

ad

ad