இந்திய அரசியலின் அதிகார பீடமாக விளங்கியவர் காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திரர். 2004 செப்டம்பரில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஊழியர் சங்கரராமன் கொலையில் இவருக்கு உள்ள தொடர்பை முதன்முதலில் வெளியிட்டது நக்கீரன்தான். அதிகார மையமாக விளங்கும் பீடாதிபதி மீது ஜெ. அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற
-
29 நவ., 2013
மர்ம முடிச்சுகளும் புரியாத புதிர்களுமாய் தெளிவில்லாத பிம்பமாக இருபது ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கியிருக் கும், ராஜீவ் கொலை வழக்கில், ’’ பேரறிவாளன் எனும் மனிதனின் 22 வருட வாழ்க்கையைக் கொன்றுவிட் டோம்’’ என்று சொல்லாமல் சொல்லி, பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார், சி.பி.ஐ.யின் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி.
வலி. வடக்கிற்குச் சென்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனை தடுத்து நிறுத்திய இராணும்
வடமாகாண முதலமைச்சரும் இந்துமதப் பெரியார்களும் இன்று வலி. வடக்கிற்குச் சென்றவேளை இராணுவத்தினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.வலி. வடக்கின் உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நடைபெறுகின்ற வீடழிப்புகளின் மத்தியில் இந்து ஆலயங்களும் இடித்துடைக்கப்படுவதாக
தமிழ் நடிகை இலங்கையின் இளம் நாடாளுமன்ற உறுப்பினருடன் இருக்கும் காணொளி: தமிழ் திரையுலகத்தில் பெரும் பரப்பரப்பு
இது தமிழ் திரையுலகில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடிகை நாடாளுமன்ற உறுப்பினரிடம் மட்டுமல்லாது இலங்கையின் தொழிலதிபர்கள் சிலருடனும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அந்த காணொளியில் இருப்பதாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் தமிழீழ தேசிய மாவீரர் நாள் அறிக்கை!
அன்பான தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். வாழையடி வாழையாக எமது முன்னோர்கள் வாழ்ந்து வந்த எமது தாயகமண்ணைக்காத்திடவும் எமது எதிர்காலச் சந்ததியினர் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவும் தம் இன்னுயிரை ஈகம் செய்த புனிதர்களை வணங்கும்
28 நவ., 2013
முல்லைத்தீவில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், நேற்று மாலை 6.05 மணியளவில் ஈகைச்சுடரேற்றி மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் தங்கள் உறவுகளை இழந்த பொது மக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
மறவர்கள் சிந்திய ரத்தம் எங்கள் கடல் நீரில் கலந்தே இருக்கிறது. அந்த நீரைப் பருகுகிற மீன்களைத் தான் எம் மக்கள் உண்கிறார்கள். அவர்களின் உடல்கள் எம் மண்ணுடன் கலந்து விதையாயிருக்கின்றன. அங்கே முளைக்கும் தாவரங்களைத்தான் நாம் உண்கிறோம். அவர்களின் எண்ண அலைகள் இன்றும் எம் பிரபஞ்சத்திலே நிறைந்தே இருக்கின்றன. அவற்றைத்தான் எம் மக்களின் எண்ணங்கள் ஈர்க்கின்றன. இப்படிக் காற்றிலும் கடலிலும் விண்ணிலும் நிறைந்து, உணவிலும் நீரிலும் எண்ணத்திலும் எம்மக்களோடும் எம் மண்ணோடும் இரண்டறக்கலந்த மாவீரர்களை எம்மிடம் இருந்து எப்படிப் பிரிப்பது?
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, உலகின் அடிப்படை மனித நாகரீகம். அந்த பொது நாகரீகத்தையே எம் மக்கள் இன்று நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இனியும் நிலை நிறுத்துவார்கள் என்றார்.
து.ரவிகரன்,
வடமாகாணசபை உறுப்பினர்
முல்லைத்தீவு மாவட்டம்.
மறவர்கள் சிந்திய ரத்தம் எங்கள் கடல் நீரில் கலந்தே இருக்கிறது. அந்த நீரைப் பருகுகிற மீன்களைத் தான் எம் மக்கள் உண்கிறார்கள். அவர்களின் உடல்கள் எம் மண்ணுடன் கலந்து விதையாயிருக்கின்றன. அங்கே முளைக்கும் தாவரங்களைத்தான் நாம் உண்கிறோம். அவர்களின் எண்ண அலைகள் இன்றும் எம் பிரபஞ்சத்திலே நிறைந்தே இருக்கின்றன. அவற்றைத்தான் எம் மக்களின் எண்ணங்கள் ஈர்க்கின்றன. இப்படிக் காற்றிலும் கடலிலும் விண்ணிலும் நிறைந்து, உணவிலும் நீரிலும் எண்ணத்திலும் எம்மக்களோடும் எம் மண்ணோடும் இரண்டறக்கலந்த மாவீரர்களை எம்மிடம் இருந்து எப்படிப் பிரிப்பது?
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, உலகின் அடிப்படை மனித நாகரீகம். அந்த பொது நாகரீகத்தையே எம் மக்கள் இன்று நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இனியும் நிலை நிறுத்துவார்கள் என்றார்.
து.ரவிகரன்,
வடமாகாணசபை உறுப்பினர்
முல்லைத்தீவு மாவட்டம்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறீஸ்கந்தராசா ஸ்ரீரஞ்சனின் மீசாலையிலுள்ள இல்லத்தின் மீது நேற்று (27.11.13) அதிகாலை 1.30 அளவில் ஆறு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதந்தாங்கிய 12க்கும் மேற்பட்ட நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் இலங்கை அரசும் அதன் படைகளும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுமானால் அது பாரிய பின் விழைவுகளை தோற்றுவிக்கும்.
பிரச்சாரப் பிரிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
28/11/2013
பிரச்சாரப் பிரிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
28/11/2013
ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை : சங்கரராமன் மகன் ஆனந்த் அதிர்ச்சி
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் இன்று இந்த மிக மிக பரப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் இன்று இந்த மிக மிக பரப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் றெக்சீன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்! பிரேத பரிசோதனையில் அம்பலம்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்சீன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் சடலத்தை பிரதே பரிசோதனைக்கு உட்படுத்திய போது சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
பிரதே பரிசோதனை சட்டவைத்திய அதிகாரியான சின்னையா சிவரூபன் முன்னிலையில் நடத்தப்பட்டது.
27 நவ., 2013
மாவீரர் நாளினை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் உதயன் பணிமனை வளாகத்தில் நடைபெற்ற மரம் நடுகை நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், வடமாகாண சபை உறுப்பினர் ஆனல்ட், வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் மற்றும் உதயன் நிறுவனம் சார்பில் எஸ்.அனுராஜ் ஆகியோர் மரங்களை நாட்டி வைத்தனர்.
நன்றி : உதயன்
நன்றி : உதயன்
உரிமைகளுக்காக உயிர் நீத்த மக்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய யோகேஸ்வரன் எம்.பி
போரின் போது உரிமைகளுக்காக போராடிய தமிழர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அஞ்சலி செலுத்தியது.நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
விதையாய் வீழ்ந்த நம் வீரர்களின் நினைவோடு விடுதலைக்காக மூன்று பெரும் பரிமாணங்களில் செயலாற்ற உறுதி கொள்வோம்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
விடுதலை, சுதந்திரம் என்ற உலகப் பெருவிழுமியங்களை தம் இதயத்தில் சுமந்து நின்று களமாடிக் காவியமாகி விட்ட நம் கார்த்திகைப்பூக்களின் நினைவு நாளில் விடுதலையினை வென்றெடுக்க மூன்று பெரும் பரிமாணங்களில் நாம் அனைவரும் செயலாற்ற உறுதி கொள்வோம்
தடைகளை தாண்டி மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நாட்டினார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
யாழ்.குடாநாட்டில் தமிழீழ மாவீரர் தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை இன்றும் நாட்டியுள்ளதுடன், இன்றைய நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு மரக்கன்று நாட்டியுள்ளார்.
வவுனியா அட்டமஸ்கட மதகுருவுக்கு எதிராக 12 வயது சிறுவன் ஒருவன் இன்றும்(26) நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாக சிறுவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து அதன் முகாமையாளரான விகாராதிபதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ். யுவதிகளுடன் கொழும்பில் ரூம் போடும் வங்கியாளர்!
வடமரட்சியில் நெல்லியடி வங்கிக் கிளை முகாமையாளரின் மன்மத லீலைகள் குறித்து கலாசாரம் பேணும் இளைஞர்கள் தளத்துக்கு முறையிட்டு உள்ளார்கள்.
விவசாய கடன் போன்ற கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றமைக்கு பிரதி உபகாரமாக பயனாளி யுவதிகளிடம் இருந்து இவர் செக்ஸ் இலஞ்சம் பெற்று வருகின்றார் என்பதற்கு புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுடனான ஆதாரங்களும் எமக்குக் கிடைக்கப் பெற்று உள்ளன.
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சடலமாக மீட்பு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்சிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக சூழல் இராணுவத்தால் முற்றுகை! பொலிஸ் குவித்து ரோந்து பணிகள் தீவிரம்!- கடும் பதற்றத்தில் மக்கள்
மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி பெருமளவான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு சோதனைகளுகம் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.
ஈபிடிபியின் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சீன் மரணம்
வாயில் இரத்தம் வெளியிட்ட நிலையில் அவர் மரணமானதாக ஈபிடிபி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தானியேலின் சடலம் தற்போது புங்குடுதீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மாவீரர் நாள் அனுசரிக்க தடை: சின்னங்களை இடித்து அகற்றிய காவல்துறை
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர்.செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் ஆண்டுதோறும் மாவீரர் நாளில் போரில் இறந்த
மாகாணசபை அதிகாரங்கள் ஜனாதிபதி போடும் பிச்சை அல்ல! அதிகாரம் ஆளுநருக்கா? முதல்வருக்கா?- சுரேஷ் எம்.பி.
மாகாணசபைக்கு வழங்கும் அதிகாரங்கள் ஜனாதிபதி தமிழ் மக்களைப் பாவம் பார்த்துப் போடும் பிச்சையல்ல. 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் என்பதையும், அதிகாரம் ஆளுநருக்கா அல்லது முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்குமா
சுவிஸின் பாசல் கழகம் பலம் மிக்க செல்சீயை இரண்டாவது முறையாகவும் வென்று சாதனை
இன்றைய பரபரப்பான ஐரோப்பிய சாம்பியன் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் பல மில்லியன் பெறுமதி மிக்க பெரிய கழகமான செல்சீயை சுவிசின் எப் சி பாசல் கழகம் 1-0 என்ற ரீதியில் வென்று வரலாறு படைத்துள்ளது .முதல் விளையாடடிலும் செல்சீ மைதானத்தில் வைத்தே 2-1 என்ற ரீதியில் வென்றிருந்த பாசல் இன்றும் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது ஒரு சாதனையாகும் முதல் பா தி வேளையில் தனது அதி உச்ச திறமையை காடடிய பாசல் இரண்டாம் பாதி வேளையில் சற்று குறைந்து பின்னர் இறுதி நேர விடாமுயற்சியில் சலா அடித்த அற்புதமான கோலின் முன்னே சாதனை பந்துக் காப்பாளரான செக் கொட்டை விட்டார் . செல்சீ 2011இல் சாம்பியன் லீக் கிண்ணத்தை பேரன் மியூனிச்சை எதிர்த்தாடி வென்றமை குறிப்பிடத் தக்கது
இன்றைய பரபரப்பான ஐரோப்பிய சாம்பியன் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் பல மில்லியன் பெறுமதி மிக்க பெரிய கழகமான செல்சீயை சுவிசின் எப் சி பாசல் கழகம் 1-0 என்ற ரீதியில் வென்று வரலாறு படைத்துள்ளது .முதல் விளையாடடிலும் செல்சீ மைதானத்தில் வைத்தே 2-1 என்ற ரீதியில் வென்றிருந்த பாசல் இன்றும் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது ஒரு சாதனையாகும் முதல் பா தி வேளையில் தனது அதி உச்ச திறமையை காடடிய பாசல் இரண்டாம் பாதி வேளையில் சற்று குறைந்து பின்னர் இறுதி நேர விடாமுயற்சியில் சலா அடித்த அற்புதமான கோலின் முன்னே சாதனை பந்துக் காப்பாளரான செக் கொட்டை விட்டார் . செல்சீ 2011இல் சாம்பியன் லீக் கிண்ணத்தை பேரன் மியூனிச்சை எதிர்த்தாடி வென்றமை குறிப்பிடத் தக்கது
26 நவ., 2013
விடுதலைப் பேரழகு
ஈழவேட்கையின் தீரா ஊற்றாகி,
காலவேள்வியில் சூறாவளியாகி,
உச்சரிக்கும் போதெல்லாம்
உணர்வுகள் ஒளிகொள்ளும்
எமையாளும் பெருந்தகையே!
வாழ்;த்துகின்றறோம்!
முன்னவனே!
மூபத்து ஆண்டுகளுக்குள்
மூத்தகுடி அவலத்தை
உலகறியச் செய்தவனே!
போற்றுகின்றோம்!
உணர்வுகளின்
அடிமைத் தோலுரித்து
ஐநூறு ஆண்டு கடந்து
விடுதலைப் பேரழகைத்
தரிசிக்கச் செய்த தலைவா!
நீயெம்
வரலாற்றுப் பேரெழில்.
உலகம்
புரிந்து கொள்ள முடியாத புத்தகம்.
அற்புத மேய்ப்பனே!
இரு பகல்களின்
இடையிட்ட இரவு இது.
எம் தூரத்து நட்சத்திரங்களைக் கூட
கயவர் களவாடி விட்ட காலம்.
‘ஒளி தரவெனச் சூரியன் இனி வரான்’
என்பதாய்ச் சூழ்ச்சிகள் சூத்திரம்
கூறுகின்றன.
கூண்டுக்கிளிகளின்
தந்திரச் சாத்திரங்களில்
சிக்கிக் கிடக்கின்றன
சின்னச் சிந்தனைகள்.
உன்னருவைப் பச்சை குத்தி
பவ்வியமாய் வலம் வருகின்றன
சில பச்சோந்திகள்.
கார்த்திகை 27இல்
நெய்விளக்கேற்றி
நெஞ்சுருகிப் பின்
உன்னுரை கேட்ட
உலகம் உயிர்திருக்குமே.
கடந்த தடங்களை அறிவாக்கி
கடக்கும் கணங்களை நேர்த்தியாக்கி
வரும்காலத்தை நெறியாக்கி
வழிகாட்டிய
உங்கள் உரைக்கு நிகர்
உலகிலேது?
வெற்றுவெளி கண்டு
இடையிட்டு எழுந்த
சில ஒலிகள்
பிரபாகரத்தின்
‘பிரதிகள்’ ஆக முயல்கின்றன.
உன் வெள்ளாட்டு மந்தைக்குள்
உருமாறி உலா வந்த
கருப்பாடுகள் சாயம் வெளிறிச்
சாத்தான்களாகித் திரிகின்றன.
உயிரைச் சுற்றிக்கிடக்கும்
ஒற்றைச்சொல் மந்திரமே!
முள்ளிமுனை முற்றுப்புள்ளியல்லவென,
உன் பெயர் ஓதி உயிர்த்திருக்கும்
பிள்ளைகள் அறிவர்.
தோலுக்கு வரி பூசி போலிக்குப் புலியாகி
கூலிக்கு மாரடிக்கும் கூனர் கும்பல்
கூடி முயன்றாலும்,
உன் விழியேறிய தழல்
ஒருபோதும் அணையாது.
பிறந்தோர் உருவிலும்
பிறப்போர் கருவிலும்
இணைந்தே இருக்கும்.
விடுதலைத் தீ.
ஆளுநர் ரோசைய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரோசைய்யாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வறிக்கையை ஜெயலலிதா வழங்கினார். தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் ஜெயலலிதா விளக்கினார்.
வடக்கு இராணுவ ஆளுநருக்கும் மாகாண சபைக்கும் முறுகல் வெடித்தது! ஆளுநரின் சர்வாதிகாரம் என குற்றச்சாட்ட
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணங்கிச் செயற்படாமல் மாகாண சபை விடயங்களில் இராணுவ ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கும் மாகாண சபைக்கும் இடையேயான முறுகல் நிலை நேற்று வெளிப்படையாக வெடித்தது.
தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சென்னை மாணவர்கள்!
|
சிறிலங்கா குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை – குத்துக்கரணம் அடித்தது சீனா |
சிறிலங்கா தொடர்பான தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்று சீனா கூறியுள்ளது. அண்மையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவகார அமைச்சின் பேச்சாளர், மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். |
இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை தடுக்க முடியாது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
தமிழ் மக்கள் மாவீரர் நாளை நினைவு கூருவதை தடுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாவீரர் நாளை நினைவு கூருவது சட்டவிரோதமானது என்று சிறிலங்கா அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து கருத்து |
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 59ஆவது பிறந்த நாள் நிகழ்வுகளில் தாயக, புலம்பெயர் மற்றும் தமிழக மக்கள் சிறப்புறக்கொண்டாடி வருகின்றனர்.
கேக் வெட்டி, சிற்றுண்டிகளைப் பரிமாறியும், பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்தும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்காக வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வுகள் கடந்த நள்ளிரவு 12.00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் கேக் வெட்டி, சிற்றுண்டிகளைப் பரிமாறி தேசியத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
25 நவ., 2013
மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முத்தையாக முரளிதரன் தெரிவாவாரா ?அவரது சகோதரர் ஒருவர் சிறைச் செல்வதை தடுப்பதற்காவே முரளி அரசுடன் கைகோர்க்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் மேல் மாகாண சபைத்தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
சென்னையில் 8வது மாடியில் இருந்து குதித்து பெண் மரணம்சென்னையில் பரபரப்பான மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கட்டிடத்தில் 8வது மாடியில் இருந்து குதித்த பெண் ஊழியர் ராஜலட்சுமி பலியானார். பட்டதாரியான இவர் அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர். உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 15 தமிழக மீனவர்கள் விடுதலை
புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி இலங்கை கடற்படை யினால் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவரையும் விடுதலை செய்தது ஊர்க்காவல் நீதிமன்றம்.இதையடுத்து இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்து மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி இலங்கை கடற்படை யினால் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவரையும் விடுதலை செய்தது ஊர்க்காவல் நீதிமன்றம்.இதையடுத்து இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்து மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)