![]() எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் உறுதியளித்துள்ளார் |
-
25 அக்., 2024
தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக செயற்படமாட்டோம்! - அமெரிக்க தூதுவர் உறுதி. Top News [Friday 2024-10-25 05:00]
அரசுடன் இணையமாட்டோம்! - அமெரிக்க தூதுவரிடம் தமிழ் பிரதிநிதிகள் திட்டவட்டம். Top News [Friday 2024-10-25 05:00]
![]() தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரப்பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என தமிழ் தரப்பு பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர் |
23 அக்., 2024
தமிழ் மக்களே....... சுமந்திரன் எம்பி ஆவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன இரண்டையும் இறுக மூடி விடுங்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பழியை மொட்டு தலைவர்களின் மீது கட்ட முயற்சி! [Tuesday 2024-10-22 17:00]
![]() உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பொறுப்பினை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மீது சுமத்த ஒருசில மதத்தலைவர்களும், அரசியல் கட்சிகளும் முயற்சிக்கின்றன. இமாம் அறிக்கையையும் எதிர்பார்த்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார் |
சுவிஸ் தூதரக அதிகாரிகள் செல்வம் அடைக்கலநாதனுடன் சந்திப்பு! [Tuesday 2024-10-22 17:00]
![]() சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் பொய்லட் தலைமையிலான குழுவினர் இன்று மன்னாருக்கு விஜயம் செய்து, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். |
அல்விஸ் ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது! [Tuesday 2024-10-22 17:00]
![]() உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அல்விஸ் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது |
தேசிய மக்கள் சக்தி அரசுடன் கூட்டுச் சேருவோம்! - ஈபிடிபி கூறுகிறது. [Tuesday 2024-10-22 17:00]
![]() பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், மக்களின் நலனுக்காகவும், அவர்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுத்து, அதில் பங்கெடுத்துக் கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான ஸ்டாலின் தெரிவித்தார் |
தமிழ் மக்களே சுமந்திரன் எம்பி ஆவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன இரண்டையும் மூடி விடுங்கள் _________________________
22 அக்., 2024
புதிய கடவுச்சீட்டில் நல்லூர் கந்தன்! [Tuesday 2024-10-22 05:00]
![]() நேற்று முதல் கடவுச்சீட்டின் புதிய பதிப்பு பாவனைக்கு விடப்பட்டுள்ளது. இதில் 6 வது பக்கத்தில் புறஊதா வண்ண ஒளியில் நல்லூர் கந்தசுவாமி ஆலய முகப்பு பதிப்பிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டுப் பக்கங்களில் தலதா மாளிகை உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. |
225 உறுப்பினர்கள் இல்லாமலேயே புதிய நாடாளுமன்றம் கூடும்? [Tuesday 2024-10-22 05:00]
![]() நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கூடவுள்ள முதல் நாடாளுமன்ற அமர்வில் பெரும்பாலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்க மாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார் |
நீதிபதிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய ஶ்ரீரங்கா தலைமறைவு! [Tuesday 2024-10-22 05:00]
![]() முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா வீட்டிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். |
யாழ்தேவிக்கு ரயில்வே அதிகாரிகள் எதிர்ப்பு! [Monday 2024-10-21 16:00]
![]() நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் மஹவ முதல் அநுராதபுரம் வரையான பகுதி நாளை திறக்கப்படவுள்ள போதிலும், இந்த இடைப்பட்ட நிலையங்களில் உள்ள ரயில்வே அதிகாரிகள் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். |
வன்னி வாக்கெடுப்பு இடைநிறுத்தப்படுமா?- நாளை விசாரணை. [Monday 2024-10-21 16:00]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி ரவி செனிவிரத்ன! [Monday 2024-10-21 16:00]
![]() உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் |
18 அக்., 2024
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு! [Friday 2024-10-18 16:00]
![]() சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது |
நீயுமா அனுர? [Friday 2024-10-18 16:00]
![]() ரில்வின் சில்வாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தா ஜே.வி.பியின் கருத்தா அல்லது தேசிய மக்கள் சக்தியின் கருத்தா என வினவிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா), கடந்த கால ஜனாதிபதி, பிரதமர் பாணியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆட்சியில் இந்த ரில்வின் சில்வா செயற்படுகிறார் எனவும் கூறினார். |
கேரதீவு - சங்குப்பிட்டிப் பாலத்தால் பயணம் செய்ய 3 நாட்களுக்குத் தடை! [Friday 2024-10-18 16:00]
![]() கேரதீவு - சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்த நிலையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு இப்பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. |
10 அக்., 2024
மேலும் 20 சீனர்களுக்கு விளக்கமறியல்! [Thursday 2024-10-10 05:00]
![]() பாணந்துறை - கொரகான பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட 20 சீன பிரஜைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார் |
தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை! [Thursday 2024-10-10 05:00]
![]() எந்தவொரு இறையாண்மையுள்ள அரசும் அதன் அரசியலமைப்பிற்கு முரணாக இயங்கும் மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையின் மேலெழுதலை ஏற்காது. மேலும், இப்பொறிமுறையின் பாதீட்டுத் தாக்கங்கள் குறித்து பல நாடுகள் ஏற்கனவே தமது தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. எனவே 51/1 பரிந்துரையின் நிர்பந்தத்தை நீட்டிக்கக் கோரி சபையில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுப் பரிந்துரையை நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அறிவித்துள்ளது. |
ஜெனிவாவில் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது தீர்மானம்! [Thursday 2024-10-10 05:00]
![]() இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கைக்கு எதிரான தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது |
மட்டக்களப்பில் சங்கு கூட்டணியின் வேட்புமனு தாக்கல்! - உதயகுமாரும் இடம்பெற்றார். [Thursday 2024-10-10 05:00]
![]() எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை, மட்டக்களப்பு மாவட்டத்தில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, நேற்று தாக்கல் செய்தது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம், கோவிந்தன் கருணாகரம் தலைமையில், நேற்று நண்பகல், வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது |
9 அக்., 2024
சமிக்ஞையின்றி திரும்பும் வாகனங்களுக்கு சிக்கல்! [Wednesday 2024-10-09 05:00]
![]() வடக்கு மாகாணத்தில் நகர்ப்பகுதி வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் உரிய சமிஞ்சைகள் இன்றி வீதிகளில் விரைவாக திரும்புதல் மற்றும் அதிக வேகம் போன்றவற்றிற்கு பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. |
சங்கு கூட்டணி இன்று வேட்புமனுத் தாக்கல்! [Wednesday 2024-10-09 05:00]
![]() எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. சங்கு சின்னத்தில் திருகோணமலை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இந்தக் கூட்டணி போட்டியிடுகிறது. திருகோணமலையில் வீடு சின்னத்தில் போட்டியிட இணங்கியுள்ளது. |
10 இலட்சம் ரூபாவை தீயிட்டு எரித்தவர் கைது! [Wednesday 2024-10-09 05:00]
![]() யாழ்ப்பாணத்தில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்த, வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். |
8 அக்., 2024
இன்று அல்லது நாளை முடிவெடுக்கிறார் சரவணபவன்! [Tuesday 2024-10-08 17:00]
![]() தமிழரசுக்கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பெயர் பட்டியலில் உள்வாங்கப்படாத கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இன்று அல்லது நாளைய தினம் அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார் |
ஜெனிவா தீர்மானத்தை எதிர்க்க அனுர அரசாங்கமும் முடிவு! [Tuesday 2024-10-08 17:00]
![]() புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில், திங்கட்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. |
7 அக்., 2024
சுமந்திரனின் அடாவடியால் சட்டத்தரணி தனஞ்சயனும் விலகினார்! [Monday 2024-10-07 17:00]
![]() 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடவிருந்த சட்டத்தரணி தனஞ்சயன், தனது முடிவை மாற்றிக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கூறியிருப்பதாவது |
6 அக்., 2024
யாழ். மாவட்ட “சைக்கிள்” வேட்பாளர்கள் கையெழுத்து! Top News [Saturday 2024-10-05 17:00]
![]() எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவில் கையொப்பமிட்டன |
தென்னிலங்கை தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலையாகும்! [Saturday 2024-10-05 06:00]
![]() ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகும் என யாழ். பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது |
4 அக்., 2024
அலைபேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் உயிர்மாய்ப்பு! [Friday 2024-10-04 06:00]
![]() யாழ்ப்பாணத்தில் அலைபேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளான். யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும், லோட்டஸ் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த தவசுதன் சாருஜன் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான் |
சங்கு சின்னத்தில் போட்டி - குத்துவிளக்கு கூட்டணி அறிவிப்பு! [Friday 2024-10-04 06:00]
![]() ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தேர்தல் திணைக்களத்தால் தற்போது சங்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு கிழக்கு முழுவதும் கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதேநேரத்தில் கொழும்பிலும் இம்முறை போட்டியிடுவது தொடர்பிலும் ஆராயந்து வருகிறோம் என ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார் |
30 செப்., 2024
முடக்க நிலையை நோக்கி ஐதேக - ஐமச கூட்டணி பேச்சு! [Monday 2024-09-30 05:00]
![]() எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையை எட்டியுள்ளது. |
பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும்! [Monday 2024-09-30 05:00]
![]() தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடும் கோரிக்கை தொடர்பில் தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார் |
வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அனைவரும் ஒன்றிணையும் கோரிக்கை தொடர்பில் விக்னேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை ஓரணியில் எதிர்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். நாங்கள் தமிழரசு காட்சி தவிர்ந்த ஒரே நிலைப்பாட்டில் பயணிக்கின்ற தமிழ் கட்சிகள் தமிழ் பொதுக் கட்டமைப்பாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. தமிழரசு கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடும் கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில் உடனடியாக அதற்கு சம்மதம் தெரிவிக்க முடியாது. ஏனெனில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பாக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சக தமிழ் கட்சிகள் தலைவர்களுடன் பேசி இறுதி முடிவை தெரிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். |
ஆதிக்கப் போக்கில் தமிழரசு - இணைய மறுக்கிறது புளொட்! [Monday 2024-09-30 05:00]
![]() தமிழரசுக் கட்சியின் அறிவிப்பின் மூலம் ஆதிக்கம் தமிழரசுக் கட்சியினுடையதே. வந்து சேருங்கள் உங்களுக்கு நாங்களாக பார்த்து தருவோம் என்றவாறான நிலைப்பாட்டை கூறியிருப்பதாகவே தெரிகின்றது. அப்படியான நிலைப்பாட்டில் நாங்கள் போக முடியாது என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார் |
29 செப்., 2024
28 செப்., 2024
பாடசாலை நிகழ்வுகளுக்கு பெற்றோரிடம் பணம் அறவிடக் கூடாது! - பறந்தது உத்தரவு. [Saturday 2024-09-28 17:00]
![]() பாடசாலைகளில் நடத்தப்படும் கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். |
26 செப்., 2024
குத்துவிளக்கு கூட்டணி தனியாக போட்டி - பொதுக்கட்டமைப்பும் இன்று கூடுகிறது! [Thursday 2024-09-26 05:00]
![]() ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியில் அங்கம்வகிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அக்கூட்டணியின் சார்பிலேயே களமிறங்குவதென உறுதியாகத் தீர்மானித்துள்ளன |
வெற்றியை நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்! - இலங்கை ஜனாதிபதி விசேட உரை
அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்! [Wednesday 2024-09-25 18:00]
![]() மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளா |
மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்! [Wednesday 2024-09-25 18:00]
![]() ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படட்டுள்ளனர் |
யாழ்ப்பாணத்தில் 6 ஆக குறையும் எம்.பிக்கள்! - வன்னியில் 6 ஆக அதிகரிப்பு. [Wednesday 2024-09-25 18:00]
![]() 2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு இலங்கை தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. |
ரணில் ஆட்சியில் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிகள் ரத்து! [Wednesday 2024-09-25 18:00]
![]() ரணில் ஆட்சியின் இறுதிக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை லைசன்களை (அனுமதிபத்திரம்) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்ய ஜனாதிபதி அனுர உத்தரவிட்டுள்ளார். |
25 செப்., 2024
பிக் பாஸ் 8 உத்தேச போட்டியாளர்கள் இறுதி பட்டியல்! [Wednesday 2024-09-25 06:00]
![]() வரும் அக்டோபர் 6ம் தேதி பிக் பாஸ் அடுத்த சீசன் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. 7 சீசன்கள் கமல் தொகுத்து வழங்கிய நிலையில் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பரவி வருகிறது. |
கனடா அமைச்சரவையில் இடம்பிடித்த இரு தமிழர்கள்! [Tuesday 2024-09-24 18:00]
![]() கனடா அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இரு தமிழர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். அந்த வகையில் , போக்குவரத்து துறை அமைச்சராக அனிதா ஆனந்தும் , போக்குவரத்து துணை அமைச்சராக அருண் தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது |
24 செப்., 2024
வவுனியாவில் 14 வயது மாணவனை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய பயிலுனர் ஆசிரியை கைது
இன்று விசேட உரை நிகழ்த்துகிறார் அனுர! [Tuesday 2024-09-24 17:00]
![]() ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். இதன்போது , புதிய அரசாங்கத்தின் எதிர் காலத் திட்டங்களை அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது |
மொட்டு ஆதரவாளர்கள் ஏமாற்றி விட்டனர்! [Tuesday 2024-09-24 17:00]
![]() நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் அநுர குமார திஸாநாயக்கவுக்கே வாக்களித்துள்ளதாகவும் பொதுஜன பெரமுனவில் தமக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை தாம் நினைத்த அளவுக்கு இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். |
ஐதேகவுடன் கூட்டு இல்லை - சஜித் தரப்பு முடிவு! [Tuesday 2024-09-24 17:00]
![]() பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டாம் என்றும், பொதுத்தேர்தலில் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவும் சமகி ஜன பலவேகய கட்சியின் மூத்த தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் |
பிரதமராகப் பதவியேற்றார் ஹரிணி! [Tuesday 2024-09-24 17:00]
![]() இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் |
இலங்கை வரலாற்றில் மற்றுமொரு பெண் பிரதமர் ஹரிணி
உலகின் முதலாவது பெண் பிரதமரை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்ற இலங்கை நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய
இன்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்! [Tuesday 2024-09-24 17:00]
![]() நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். |
23 செப்., 2024
ன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுதத் தயாராக நிற்கிறோம்! [Monday 2024-09-23 06:00]
![]() 2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்கவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அறிவித்தார். |
ஜனாதிபதி அலுவலகம், இல்லத்தை காலி செய்தார் ரணில்! [Monday 2024-09-23 06:00]
![]() நாட்டின் புதிய ஜனாதிபதிக்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த தனது உடைமைகளை அகற்றியுள்ளார். அத்துடன், ஜனாதிபதி பதவிக்கு சொந்தமான அனைத்து அரச வாகனங்களையும் கையளித்துள்ளதுடன், பெஜெட் வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |