புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2014

திமுகவில் நமீதா? அதிமுகவில் சிம்ரன்? சூடு பிடிக்கும் தேர்தல் களம்.

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே தேர்தலுக்கு தயாராகி வரும் சூழ்நிலையில் முக்கிய நடிகர் நடிகைகளை தங்கள்
பக்கம் இழுக்க பல கட்சிகளும் போட்டி போட்டு வருகின்றன. முக்கியமாக நடிகை நமீதா சமீபத்தில் அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்ததை அடுத்து அவரை வளைத்து போட காங்கிரஸ், திமுக மற்றும் பாரதிய ஜனதா முயற்சி எடுத்து வருகின்றன.
நமீதா குஜராத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் பாரதிய ஜனதாவில்தான் சேருவார் என்ற கருத்து பரவி வரும் நிலையில், மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் நன்கு பழக்கப்பட்ட குஷ்புவின் தீவிர முயற்சியால் நமீதாவை திமுக பக்கம் இழுக்கவும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியும் நமீதாவுக்கு மகளிர் அமைப்புகளில் ஏதாவது ஒரு பதவி கொடுத்து கட்சியி இழுக்க முயற்சி செய்கிறது. நமீதா இம்மாதத்தில் எந்த கட்சியில் சேருவது என்பது குறித்த முடிவை அறிவிக்க இருக்கிறார். மேலு நமீதாவை தவிர சிம்ரனும் அரசியலில் குதிக்க உள்ளர். அவர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
மேலும் மார்க்கெட் போன நடிகர், நடிகைகளை இழுக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒரு முன்னணி நகைச்சுவை நடிகர் திடீரென அரசியல் பிரவேசம் செய்யவுள்ளதாக விரைவில் அறிவிப்பு வரும் என கூறபப்டுகிறது.

ad

ad