புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014


எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல்!- சிலோன் ருடே தகவல்
2015ம் ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கபட்டிருந்த ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே எதிர்வரும் நவம்பரிலேயே நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரச உயர்வட்டாரங்களை மேற்கோள்காட்டி 'சிலோன் ருடே' ஆங்கில நாளிதழ் இன்று தலைப்புச் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
 இது தொடர்பாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அதன்படி புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசு ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட்டதும் அத் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணையாளர் விடுப்பார்.
தற்போதைய அரசமைப்பின்படி, ஜனாதிபதி ஒருவர் தமது ஆறாண்டு பதவிக் காலத்தில் முதல் நான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் எந்தச் சமயத்திலும் முற்கூட்டித் தேர்தலுக்கு உத்தரவிட முடியும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது. எனினும் அத்தேர்தல் வெற்றி மூலம் கிடைத்த தமது புதிய பதவியை 2010 நவம்பரில்தான் ஜனாதிபதி ஏற்றிருந்தார்.  ஆகவே அவரது தற்போதைய பதவிக் காலத்தின் முதல் நான்கு ஆண்டுகள் 2014 நவம்பரில்தான் முடியும்.
தற்போதைய அரசமைப்பு ஏற்பாடுகளின்படி, இனி ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்துவதாயின் அதற்காக 2014 நவம்பர் வரை ஜனாதிபதி ராஜபக்‌ச காத்திருக்க வேண்டும்.
அதன் பின்னரே புதிய தேர்தலுக்கான அறிவிப்பை அவர் விடுக்க முடியும். அப்படி அறிவிப்பு விடுக்கப்பட்டால் அதற்குப் பிறகு, 2015 ஜனவரிக்குப் பின்னர்தான் அத்தேர்தல் சாத்தியமாகும்.
இந்நிலையில் ஊவா மாகாண சபைத் தேர்தல் பற்றிய அறிவிப்பு ஜூனில் வெளியாகி அத்தேர்தல் ஓகஸ்டில் நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அது ஓகஸ்டில் முடிவடைந்த கையோடு புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்து, நவம்பரில் அத்தேர்தலையும் நடத்தி முடித்துவிட அரசு விரும்புகின்றது.
அப்படி முற்கூட்டியே தேர்தலை நடத்துவதாயின் அதற்கென மீண்டும் ஓர் அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவும் வேண்டும்.
தற்சமயம் அத்தகைய பெரும்பான்மை ஆதரவு நாடாளுமன்றத்தில் தனக்கு இருப்பதாகக் கருதும் அரசு, அதன் மூலம் அந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றி, ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்த எண்ணியுள்ளது என்கிறது அந்த ஆங்கில நாளிதழ்.
அதேசமயம் ஊவா மாகாண சபைத் தேர்தல், உத்தேச ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பல்வேறு திட்டங்களை அறிவிக்கவும் அரசு விரும்புகின்றது என்றும் அந்த நாளிதழ் தெரிவித்தது.
இதற்காக, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்தல், தற்காலிக மற்றும் சமயாசமய ஊழியர்களைப் பணி நிரந்தரமாக்குதல், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் உரம் மற்றும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளித்தல், மின் கட்டணத்தைக் குறைத்தல் என்பன உட்படப் பல விடயங்கள் குறித்து திறைசேரிச் செயலாளருடன் தொடர் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் கூட அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

ad

ad