புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2012

இராணுவத்திற்கு தமிழர்களை இணைப்பது நல்லிணக்கமல்ல: மனோ
வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக போரில் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை அரசு முன்னெடுக்கின்றது. எனவே அராசங்கத்தின் நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அல்ல என்று ஜனநாயக
மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
வடக்கில் இராணுவத்தை குறைத்து பொலிஸ் திணைக்களத்துக்கு தமிழர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய தேவையாகும். எனினும் அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கூட கவனத்தில் கொள்ளாது தன்னிச்சையாக செயற்படுகின்றமை ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் - 7இல் அமைந்துள்ள அசாத்சாலி மன்றத்தில் இன்று, 'அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட ஊடக மாநாட்டின் போதே ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்தார்.

ad

ad