புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013


நக்கீரன் எக்ஸ்குளூசிவ் செய்தி :
ஜெ.,வுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் வைத்த ஆப்பு
 


ர்நாடகாவில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கக்கூடிய நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணாவுக்கு பதில் புதிய நீதிபதியாக முடிகவுடர் என்கிற நீதிபதியை கர்நாடகா உயர்நீதிமன்றம் நியமித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது. 



ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா வருகிற 31ம் தேதி ஓய்வு பெறுகிறார்.  அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அத்துடன், அரசு வழக்கறிஞரான பவானிசிங்கை மறுபடியும் நியமிக்க வேண்டும் எனவும், அந்த வழக்கில் கேட்டுக்கொண்டுள்ளார். 

அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்துகொண்டிருக்கும் நிலையில்,  கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி கே.எல்.மஞ்சுநாத், எம்.எஸ். பாலகிருஷ்ணாவுக்கு பதிலாக தமிழகத்தைச்சார்ந்த முத்திரைத்தாள் மோசடி மன்னன் முகமது அலி ஐபிஎஸ் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் முடிகவுடர் என்பவரை வருகிற 1ம் தேதி முதல் ஜெ.,வின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக நியமித்துள்ளார்.  இதன் மூலம்  கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு இல்லை என ஜெ.,வின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

ad

ad