புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 ஜன., 2015

அலரிமாளிகை அலுமாரியில் ராஜபக்சே 'மறந்து' வச்சிட்டுப் போன ரூ. 1500 கோடி


இலங்கை அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்துவிட்டுப்போன ரூபாய் 1500 கோடியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறந்து வைத்து விட்டுப் போனதே இத்தனை கோடி என்றால் மறக்காமல் எடுத்துச் சென்றது எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையில் 2 முறை அதிபராக இருந்த ராஜபக்சே கடந்த 8 ம் தேதி நடந்த தேர்தலில் 3 ஆவது முறையாக போட்டியிட்டு தோல்வியுற்றார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய சிறிசேன இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்று பதவியேற்றுள்ளார்.
தேர்தலில் தோல்வியடைவது உறுதி என அறிந்ததும் இராணுவத்தின் மூலம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற எண்ணியதாக ராஜபக்சே மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக புதிய அரசு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இந் நிலையில் அலரிமாளிகை எனப்படும் அதிபர் மாளிகையில் இரகசிய அறை ஒன்றில் இருந்த ரூபாய் 1,500 கோடி பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதில் இலங்கை ரூபாய் நோட்டுகளும், பல்வேறு வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.
இதன்மூலம் ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது அதிகாரத்தைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த பணத்தை ராஜபக்சே குடும்பத்தினர் மறந்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் விட்டுச்சென்ற பணமே இவ்வளவு என்றால் அவர்கள் எடுத்துச் சென்ற தொகை எவ்வளவு என அதிபர் மாளிகை அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே ராஜபக்சே குடும்பத்தினர் அரசின் பாதுகாப்பு நிதியத்தில் இருந்து பெருமளவு பணத்தை எடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிதியத்தின் தெப்ரபேன் கிளையில் இருந்த ரூபாய் 20 ஆயிரம் கோடி பணத்தில், தற்போது வெறும் ரூபாய் 7 ஆயிரம் கோடி மட்டுமே இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் ராஜபக்சே குடும்பத்தினர் சுமார் ரூபாய் 13 ஆயிரம் கோடியை அபகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது என்றும், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சராக இருந்த ராஜபக்சே எவ்வித ஆவணமும் இன்றி இந்தப் பணத்தை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மாபெரும் நிதி மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிபர் வட்டாரம் தெரிவித்துள்ளது.
கொலை, கொள்ளை என்று ஒரு கொள்ளைக்காரன் செய்யவேண்டிய செயல்களைச் செய்த ஒருவர் இவ்வளவு நாட்கள் ஒரு நாட்டின் அதிபராக எப்படி இருந்தார் என்பதுதான் இப்போது உலக அளவில் கேட்கப்படும் மில்லியன் டாலர் கேள்வி!