புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

இருதரப்பு விவகாரம் சுஸ்மா - மங்கள சந்திப்பு ஜெனிவா கூட்டத் தொடருக்கு ஆதரவு திரட்டும் முயற்சி


புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தி த்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
புதுடில்லியில் நேற்று பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் அரசியல் தீர்வு, மீனவர்கள் விவகாரம் மற் றும் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறி த்து விவாதிக்கப்பட்டுள்ளதுடன்,  புதிய ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் குறித்தும் ஆலோசனைகள் இடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. 

இச்சந்திப்பில், இந்தியாவின் வெளிவிவ கார அமைச்சர் சுஸ்மா சுவராஜூடன் வெளி விவகாரச் செயலாளர் சுஜாதா சிங், இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான மேலதிகச் செயலாளர் சுசித்ராதுரை, வெளி விவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பரு தீன் மற்றும்  இலங்கைக்கான தூதுவர் வை. கே.சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகளும் பங் கேற்றிருந்தனர்.

அதேவேளை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் புதுடில்லிக்கான இல ங்கைத் தூதுவர் சுதர்சன் செனிவிரத்ன உள் ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனிதவு ரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொட ரில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் அழைப்பை ஏற்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மூன்று நாள் அதி காரபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை புதுடில்லி க்கு விஜயம் செய்தார்.

இதனிடையே, புதுடில்லி புறப்படுவதற்கு முன்னதாக  கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச் சர் மங்கள் சமரவீர, \'இலங்கை சீனாவுடன் எப்போதும் நல்லுறவைக் கொண்டுள்ளது. ஆனால் அது அயல் நாடுகளுடனான உறவுக ளைக் கெடுப்பதாக அமையக் கூடாது.

நான் வெளிவிவகார அமைச்சராக பதவி யேற்றவுடன் இந்திய வெளிவிவகார அமை ச்சர் சுஸ்மா சுவராஜிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் எனது பழைய நண் பர். 1990களில் நாம் இருவரும் தொலைத் தொடர்பு அமைச்சர்களாக இருந்தோம்.

அவர் என்னை ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மதிய போசனத்துக்கு வருமாறு அழைத்த போது, அந்த அழைப்பை உடனே நான் ஏற்றுக் கொண்டேன். இது ஒரு தனிப்பட்ட அழைப் பாக முன்னர் இருந்த போதிலும், தற்போது அது அதிகாரபூர்வ பயணமாகியுள்ளது.

எனது இந்த பயணத்தின் போது இரு நாடு களுக்கும் இடையில் பல ஆண்டுகளாகத் தொடரும் உறவுகளை மேலும் வலுப்ப டுத்தும் வகையில் பல்வேறு இருதரப்பு விவகாரங் கள் குறித்து விவாதிக்கப்படும் என்று மங்கள சமரவீர மேலும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித வுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவத ற்கு கொழும்பு முயற்சிகளை மேற்கொள்ளும் என இந்திய வெளிவிவகார அமைச்சு வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆயினும், மனிதவுரிமை நிலைமைக ளில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் அரசி யல் தீர்வு போன்ற விடயங்களைப் பொறு த்தே இலங்கைக்கு ஆதரவு வழங்குவது குறித்த முடிவு தங்கியிருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள் ளார்.

அதேவேளை, புதுடில்லியில் இருந்து இன்று மாலை கொழும்பு திரும்பவுள்ள மங்கள சமர வீர, தன்னுடன் வெளிவிவகார அமைச்சின் எந்த அதிகாரியையும் அழைத்துச் செல்ல வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.      

ad

ad