புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

ஆசியாவின் ஆச்சரியம் இனிமேல்தான் நடக்கப்போகிறது


zதமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்றொரு நிகழ்ச்சி நடைபெறுவது நீங்கள் அறிந்ததே.

முரண்பாடுடைய இரு தரப்பி னர் குறித்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். அறிவிப்பாளர் இரு சாரா ரின் பிரச்சினைகளைக் கேட்டறி ந்து  அதற்குத் தீர்வுகாண உதவி செய்வார்.

இதன்போது முரண்பாடுகள் குற்றச்சாட்டுக்களாக  இரு தரப்பினராலும் மாறி மாறி சுமத் தப்படும். இப்படியான அந்நிகழ்வில் ஒரு நாள் தந்தையும் மகளும்  கலந்து கொண்டனர்.

இருவருக்குமிடையில் கடும் பிரச் சினை. தந்தை, மகள் மீது குற்றம் சுமத்த; மகள் தந்தையை குற்றம் சாட்டினார்.  இவ்வாறு மாறிமாறி குற்றச் சாட்டுக்கள் சுமத்த இருவரின்  கோப மும் உச்சம் அடைந்தது.

ஒரு கட்டத்தில் தந்தை தன் மகளைக் கடுமையாக விமர்சித்தார்.  அச்சந்தர்ப்பத்தில் கடுப்படைந்த மகள் \"நீ மூன்று பேரைக் கொலை செய்தவன்\" என்று சொல்லி விட,  சொல்வதெல்லாம் நிகழ்ச்சியும் அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும் பர பரப்படைந்தனர்.

அறிவிப்பாளருக்கு அவல் கிடைத்தது போல கேள்விக்கு மேல் கேள்வி தொடுக்க, எனது தந்தையின் நண்பர் ஒருவர் தனது மகன், மருமகள் ஆகியோருடன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.

மகனின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்புத் தெரிவிக்க தன் காதலியை மகன் கூட்டி வந்ததால் ஊரில் இருப்பது ஆபத்தெ ன்று கருதியே அவர்கள் மூவரும் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.

என் தந்தை உதவுவார் என்ற நம்பிக்கையோடு வந்த அவர்களிடம் தங்க நகைகளும் பணமும் இருந்தன.
அந்தப் பணத்தையும் நகைகளையும்  கபளீகரம் செய்வதற்காக எனது தந்தை அந்த மூவரையும்  ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கூட்டிச் சென்று கொலை செய்து அவர்களைப் புதைத்து விட்டார்.

இப்படி மகள் கூற, தமிழகமே விறைத்துப் போயிற்று. உடனடி யாகப் பொலிஸார் தலையிட்டு குறிப்பிட்ட இடத்தில் தேடுதல் நடத்திய போது தந்தை, மகன், மருமகள் என்ற மூவரின் உடல்களும் மீட் கப்பட்டன.

இந்தச் சம்பவம் இந்திய தேசம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   இச்சம்பவத்தை உங்களில் பல ரும் தொலைக்காட்சியில் பார்த்தி ருப்பீர்கள்.

சம்பவம் உண்மையாயினும் இவ்விடத்தில் இது எதற்கானது என்று நீங்கள் கேட்கலாம். அந்தக் கேள்விக்கு; மூவரைக் கொலை செய்த உண்மையை வெளிப்படுத் தியவர் கொலை செய்தவரின் மகள் என்ற பேருண்மையை நீங்கள்  அறிய வேண்டும் என்பதற்காகவே. அந் நிகழ்ச்சி பற்றி இவ் விடத்தில் குறிப்பிட்டோம்.

தந்தை செய்த கொலையை மகள்  சொல்ல வேண்டிய தேவை எதற்கானது? என்றால், கொலை செய்து விட்டு  அபகரித்த  பணம் மற்றும் நகையில் மகளுக்கு எதுவும் கொடுக்காததே காரணமாம்.

ஆம், யாருக்கும் தெரியாமல் நடத்தப்பட்ட கொலையை தான் பெற்ற மகளே காட்டிக்கொடுத்தாள் எனில் உண்மைகள் எப்போதும் உறங்கமாட்டாது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவைப் படாது.

நாட்டில் நடந்த ஆட்சி மாற்றம்  ஒரு புதிய பயணத்தை நோக்கிய தாக இருப்பதை அவதானிக்க முடி கிறது.
இந்நேரத்தில் முன்னாள் ஜனா திபதி மகிந்த ராஜபக்­வின் ஆட் சிக்காலத்தில் நடந்த ஊழல்கள் , கொலைகள் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ண முள்ளன.

மகிந்த ராஜபக்­வோடு கூட இரு ந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒரு முறைப்பாட்டைப் பதிவு செய்துள் ளார்.

அந்த முறைப்பாட்டில் சண்டே லீடரின் ஆசிரியராக இருந்த லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கும் முன்னாள்  பாதுகாப்புச் செயலா ளர் கோத்தபாய ராஜபக்­வுக்கும் தொடர்பு உள்ளது என தெரிவிக் கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மகிந்த ராஜபக்­வின் மிக நெருங்கிய நண்பர். மேர்வின் எது செய்தாலும்  அதைப்பற்றி மகிந்த தட்டிக் கேட்டதே  கிடையாது.

அந்தளவுக்கு இருவரும் நெருங் கிய  ஒற்றுமை உடையவர்கள். இருந் தும் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கும்   கோத்தபாய ராஜபக் ­வுக்கும் தொடர்பு உள்ளது என  மேர்வின் சில்வா முறைப்பாடு செய் துள்ளார் என்பது ஆச்சரியமான  உண்மை.

இரவு விடுதி ஒன்றில் அட்டகாசம் புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் மேர் வின் சில்வாவின் மகன் கைது செய் யப்பட்டிருந்தார்.

மகனை விடுவிப்பதற்காக மேர் வின்  படாப்பாடு. எனினும்  அதனை கோத்தபாய ராஜபக்­ செவிமடுக்க வேயில்லை.

ஒரு அமைச்சராக இருந்தும் தனது மகனுக்குப் பிணைபெற்றுக் கொடுக்க முடியவில்லை என்ற கவலை மேர்வினைக் கடுமையாக வாட்டியது.

அந்தச் சம்பவத்தோடு  அமைதி யடைந்த  மேர்வின் சில்வா, தனது மகன் சிறையில் அடைக்கப்படுவ தற்கு கோத்தபாய ராஜபக்­வே  காரணம் என்று நம்பினார். அந்த நம்பிக்கைக்கு ஆதாரங்க ளும் இருக்கவே செய்தன.

பழிக்குப்பழி
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக் கப்பட்ட போது மகிந்த ராஜபக்­ வின் பக்கத்தில் இருந்தவர்கள் மைத் திரி பக்கத்திற்குதாவத் தொடங்கினர்.

மேர்வினும் மைத்திரியின் பக்கத் திற்குச் சென்றாராயினும் மைத்திரி தரப்பு அவரை ஏற்க மறுத்து விட்டது.
மகிந்தவின் ஆட்சியில் மிகப் பெரிய  அட்டகாசம் செய்து  கோமா ளித்தன அமைச்சராக இருந்தவர் மேர்வின்.

சமுர்த்தி உத்தியோகத்தர் ஒரு வரை மரத்தோடு கட்டி வைத்து மிகப் பெரிய காட்டுமிராண்டித் தனத்தை செய்த மேர்வினை தமது பக்கம் எடுக்கக் கூடாது என்பதில் மைத்திரி தரப்பு மிகவும் விளிப்பாக இருந்தது.

ஆதரவு தெரிவித்து மைத்திரியி டம் சென்ற மேர்வினைப் பார்த்து உமது ஆதரவு எமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார் மைத்திரி. இருந்தும் மேர்வின் கோபமடைய வில்லை.

அவரது கோபமெல்லாம் கோத்தா மீதே இருந்தது. அரசியலில் கோமா ளித்தனம் இருந்தாலும் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு அமையும் என்பதை மேர்வின் சில்வா அறிந் திருந்தார். அதனா லேயே அவர் மைத்திரியிடம் சென்றார்.

மைத்திரி தன்னை ஏற்க மறுத்த போது ஈஈபரவாயில்லை எதிர்வரும் காலங்களில்  நான் எதிர்க்கட்சி வரி சையில் இருப்பேன்டுடு என்று கூறி விட்டு வீடு திரும்பிவிட்டார்.

எதிர்கட்சியின் வரிசையில்  இருப் பேன் என்று மேர்வின் கூறியதற் குள் மகிந்த தோல்வி  அடைவார் என்ற செய்தி இருந்துள்ளது என்ற உண்மையை மறுத்து விடமுடி யாது.

தேர்தல் முடிபு வரைக்கும் காத்தி ருந்த மேர்வின் இப்போது லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும் கோத்தபாய ராஜபக்­வுக்கும் தொடர்பு உண்டு என முறைப்பாடு செய்து, தென் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மைத்திரியின் பக்கத்தில் நின்று கொண்டு மேற்குறித்த குற்றச் சாட்டை மேர்வின் முன் வைத்தி ருப்பாராயின் எல்லாம் திட்டமிட்ட சதிச் செயல் என்று மகிந்த ஆதர வாளர்கள் கூறியிருப்பர். ஆனால் மேர்வினின் ஆதரவை வேண்டாம் என்று கூறியவர் மைத்திரி.

எனவே திட்டமிட்ட சதிச் செய லென்று எவரும் மறுதலிக்க முடி யாத அளவில் மேர்வினின் முறை ப்பாடு உள்ளது.

மகிந்தவின் காலத்தில் கோமா ளித்தனமாகப் பேசப்பட்ட மேர் வின், எதிர்காலத்தில் ஒரு உண் மையை பகிரங்கப்படுத்தியவர் எனப் பெருமைப்படுத்தப்படுவார் என்று நம்பலாம்.

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மட்டு மன்றி முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர மற்றும் ரகமலொக்குசிய்யா  ஆகியோரின் கொலைகளிலும் கோத்தபா யவுக்குத் தொடர்பு உண்டு என மேர்வினின் முறைப்பாடு நீண்டு செல்வதில் இருந்து மகிந்த குடும் பத்திற்கான எதிர்ப்பு தென்பகுதி யில் எந்நேரமும் வெடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இவை ஒருபுறம் நடந்து கொண் டிருக்க,  றக்பி வீரரான மொஹமட் வஹீம் தாஜுதீன் என்பவரின் கொலை க்கும்  மகிந்தவின் இரண்டாவது மகன் ஜோ´த ராஜபக்­வுக்கும் தொடர்பு இருப்பதாக ஜோ´த வின் காதலி யசாரா அபேயநாய க்க அவுஸ்திரேலியாவில் வைத்து தெரிவித்துள்ளதாக, த இன்டிப் பென்டன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் உண்மைத் தன்மைகள் எவ்வாறானவை என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
எனினும்  மகிந்த எதிர்பார்த்த ஆசியாவின் ஆச்சரியம் அவரின் ஆட்சிக் காலத்தில் நடக்க வில் லையாயினும்  இனிமேல் நடக்கப் போகிறது.

ஆம் முன்னாள்  ஜனாதிபதி மகிந்த  ராஜபக்­வின் குடும்பத்தினர் மீது முன்வைக்கப்படும் குற் றச்சாட்டுக்கள் ஆசியாவின் ஆச் சரியமாக இருக்கும் என்பதில் ஆச் சரிய மில்லை
.

ad

ad