புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 ஜன., 2015

கெப்பிட்டிகொல்லாவ16பேரின் ுகொலைகளுக்கு உத்தரவிட்டது எந்த ராஜபக்ஷ?


2008 ஆம் ஆண்டு கெப்பிட்டிகொல்லாவ – ஹெராவுபத்தான- கிரிகட்டுவெவ கிராமத்தில் கொலை செய்து புதைக்கப்பட்டிருந்தவர்களின் படுகொலைகள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
கொல்லப்பட்ட அந்த 16 பேர் யார், கொலைகளுக்கு யார் உத்தரவிட்டனர். கொலைகளுக்கான பின்னணி என்ன என்பதும் இதுவரை தெரியவரவில்லை.
இந்த கொலைகள் சம்பந்தமாக கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றம் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்கு அனுராதபுரம் நீதிமன்ற வைத்திய அதிகாரி முழுமையான அறிக்கை ஒன்றை வழங்கியிருந்தார்.
2008 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி கெப்பிட்டிகொல்லாவ நகரில் இருந்து 9 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் கிரிகட்டுவெவ பிரதேசத்தில் சடலங்களின் பாகங்கள் வெளியில் தெரியும்படி புதைக்கப்பட்டிருந்தை கிராமவாசி ஒருவர் கண்டறிந்தார்.
இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கெப்பிட்டிகொல்லாவ நீதவான் சிவந்த மஞ்சநாயக்க முன்னிலையில் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இரண்டு குழிகளில் இந்த சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. ஒன்றில் 10 சடலங்களும் மற்றைய குழியில் 6 சடலங்களும் புதைக்கப்பட்டிருந்தன.
சடலமாக மீட்கப்பட்டவர்கள் அனைவரும் மிக அருகில் வைத்து தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் 40 வயதுக்கும் குறைவான வயதுடையவர்கள் எனவும் தெரியவந்தது.
சடலங்கள் தொடர்பான மரணத்திற்கு பின்னரான பிரேத பரிசோதனைகள் அப்போது அனுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றிய சட்ட வைத்திய அதிகாரியான கே.என். சமரகோனினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விசாரணைகளை கெப்பிட்டிகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். எனினும் அப்போது பதவியில் இருந்து பாதுகாப்பு பிரதானி ஒருவரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் கீழடிப்புச் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.