புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

சீசெல்ஸில் ராஜபக்சவின் சொத்துக்கள்! விசாரணைகள் மேற்கொள்ளப்படும்: அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சீசெல்ஸ் நாட்டில் கொண்டிருக்கும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
திட்டமிடல் மற்றும் பொருளாதாரத்துறை பிரதியமைச்சர் ஹர்சா டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இந்தவிடயத்தில் விசாரணைகளை மேற்கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன.
இதற்காக தனிப்பட்ட கணக்காய்வாளர்களின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைக்காக உலக வங்கியின் திருடப்பட்ட சொத்துக்கள் மீட்பு திட்டத்தின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் ஹர்சா சுட்டிக்காட்டியுள்ளார்.
சீசெல்ஸ் நாடு, திருடப்பட்ட சொத்துக்களின் பாதுகாப்பான சுவர்க்கமாக கருதப்படுகிறது.
இந்தநிலையில் சீசெல்ஸின் முகவரிகளை கொண்டு சுவிஸ் நாட்டின் வங்கிகளில் பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியில் இருக்கும்போதே தாம் குற்றச்சாட்டை முன்வைத்திருந்ததாக ஹர்சா சுட்டிக்காட்டியுள்ளார்.
90,000 பேரை மாத்திரமே கொண்ட சீசெல்ஸில் இருந்து கடந்த வருடத்தில் மாத்திரம் சுவிஸ் வங்கிகள் மேற்கொள்ளப்பட்ட வைப்புக்கள் அதிகரித்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad