புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 ஜன., 2015

அரசியல் பழிவாங்கல்களை நிறுத்துங்கள் ; மகிந்த


அரசியல் பழிவாங்கல்களை உடன் நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.


இன்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த அவர் வழிபாடுகளில் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1931 ஆம் ஆண்டில் இருந்து அரசியல் செய்யும் எங்களுடைய வீட்டில் முதல் தடவையாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அகவலவத்தை, களுத்துறை சம்பவங்கள் மூலம் அரசியல் பழிவாங்கல் நிகழ்வுகள் வெளிகாட்டப்பட்டுள்ளது.

அப்பாவி பொதுமக்கள் இதனை எதிர்பார்த்து வாக்களிக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் மக்களின் தேவைக்காக தான் எப்போதும் முன்நிற்பதாக கூறியுள்ளார்.

மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்ததாகவும் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது கூடாது என்றும் அரசியல் ஒழுக்கம் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.