புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 ஜன., 2015

கே.பியை கைது செய்ய புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம்: தேசிய சுதந்திர முன்னணி


முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பில் விடப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்த குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை கைது செய்வதற்காக புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில், அரசாங்கத்திற்கு மட்டும் அல்ல மக்கள் விடுதலை முன்னணிக்கும் கே.பியை கைது செய்வதில் அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.