புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 ஜன., 2015

ஐ.பி.எல் 2015: ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக முரளிதரன்

ஐ.பி.எல்- 2015 தொடரில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 
இலங்கை அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, சர்வதேச அரங்கில் இருந்து விடைபெற்றார்.
 
அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த முரளிதரன்,66 போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் சென்னை, கேரளா மற்றும் பெங்களூர் அணிகளில் விளையாடியுள்ளார்.
 
2010, 2011ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணியிலும், 2010 ஆண்டு நடந்த சம்பியன்ஸ் லீக் போட்டியிலும் கிண்ணம் வென்ற சென்னை அணியிலும் இணைந்திருந்தார்.
 
பெங்களூர் அணியில் இருந்து அழைப்பு இல்லாததை அடுத்து 2014ம் ஆண்டோடு ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
 
மேலும் இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் அணியின் வழிகாட்டியாக தெரிவு செய்துள்ளது.