புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு தோல்வி



இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
முதலமைச்சர் பதவி தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படாததே இந்த தோல்விக்குக் காரணம் என இரு தரப்பும் கூறுகின்றன.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் தொடர்பாக இன்று வரை இரு தரப்பினருக்குமிடையில் மூன்று சுற்றுப் பேச்சுக்கள் நடந்துள்ளன.
இறுதியாக இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பும் இணக்கப்பாடு இன்றி தமது பேச்சுவார்த்தையே முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமது கட்சிக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நாளை உத்தேசிக்கப்பட்டிருந்த ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை என்கின்றார் எதிர்க்கட்சி தலைவர் சி. தண்டாயுதபாணி.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணக்கப்பாடுக்கு வராமைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
ஆட்சி மாற்றம் தொடர்பாக வேறு யுக்திகள் பற்றி அவர்கள் சிந்திக்கின்றார்களோ என்பதும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ள அவர் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சபை அமர்வின் பின்னர் அடுத்த கட்டம் குறித்து தீர்மானம் எடுப்போம் என்றும் குறிப்பிட்டடார்.
முஸ்லிம் முதலமைச்சர் என்பது முஸ்லிம்களின் அபிலாஷையாக இருப்பதால்தான் இந்த விடயத்தில் விட்டுக் கொடுக்க முடியாத நிலை என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் மொகமட் ரம்ழான் அன்வர் கூறுகின்றார்.
2012ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலின் பின்பு ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை பெற முதலமைச்சர் அக்கட்சிக்கு விட்டுக் கொடுக்க தயார் என்று அறிவித்திருந்தது.
இதனை சுட்டிக்காட்டும் அவர் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க மறுப்பதற்கான காரணம் தெரியவில்லை என்றும் கூறுகின்றார்.
2012ம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியிருந்தது.
அந்த ஆதரவை ஜனாதிபதி தேர்தலின் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலக்கிக் கொண்டாலும் தற்போதைய நிலையில் தற்காலிகமாக தற்போதுள்ள ஆட்சிக்கு ஆதரவு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக எதிர்கட்சிகள் கருதுகின்றன.
இருந்தாலும் இன்று திங்கட்கிழமை இரவு கட்சி தலைமைக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம் பெறுவதாகவும் அந்த சந்திப்பில் தமது அடுத்த கட்ட நகர்வு குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது.
இதற்கிடையில் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஐக்கிய மக்கள் சுதந்திர. முன்னனியின் செயலாளருக்கு இன்று திங்கட்கிழமை அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
2012ம் ஆண்டு மாகாண ஆட்சி அமைக்கும் போது இரு கட்சிக்குமிடையில் முதலமைச்சர் பதவி முதல் இரண்டரை வருடங்கள் ஐ. ம. சு . முன்னனிக்கும் அடுத்த இரண்டரை வருடங்கள் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸக்கும் என இணக்கம் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அந்த அடிப்படையில் அவரது பதவிக் காலம் இன்னமும் மூன்று மாதங்களில் முடிவடையவிருக்கின்றது.
தனது பதவிக் காலம் முடிவடையும் போது அதனை விட்டுக் கொடுக்க தான் தயார் என்றும் இது தொடர்பான ஜனாதிபதியுடன் பேச ஏற்பாடுகளை செய்து தருமாறு அவர் கேட்டுள்ளதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்று கூறுகின்றது.

ad

ad