புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

31 பந்துகளில் சதம் குவித்தார் டி வில்லியர்ஸ் சாதனைகள் பல படைத்து தென்னாபிரிக்கா வெற்றி


தென்னாபிரிக்காவின் ஸ்ரைலிஷ் துடுப் பாட்ட வீரர் டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் குவித்து உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்ய, மேற்கிந்தியத் தீவுகளு க்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 148 ஓட்டங்களால் அமோக வெற்றி பெற்றது.

பல்வேறு உலக சாதனைகளுக்கு சொந்த மான ஜொகன்னஸ்பேர்க் வொண்டரஸ் ஆடுகளத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந் தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத் தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, தனது  ஒருநாள் கிரிக்கெட் சரித்திரத்தில் மூன் று துடுப்பாட்ட வீரர்கள் சதம் குவித்து அசத்த 50 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 439 ஓட்டங்களை எடுத்தது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் றொஸ்ஸோ 128 (கன்னிச் சதம்), அம்லா 153மீ, அணித் தலைவர் டி வில்லி யர்ஸ் 149 (44 பந். 9 பவுண். 16 சிக்ஸ்)   ஓட்ட ங்கள் எடுத்தனர்.

440 ஓட்டங்கள் என்ற கடின வெற்றியி லக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அதிரடி மன்னன் கிறிஸ் யஹய்லின் (19) விரைவான வெளியேற்றம் தோல்வியையும் உறுதிப்படுத்த, மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

துடுப்பாட்டத்தில் டுவைன் ஸ்மித் 64, அணித் தலைவர் ராம்டீன் 57 ஓட்டங்களை எடுத்தனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார் பில் மோர்கல், பிலாண்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக சாதனைகள் பல படைத்த தென்னாபிரிக்க அணித் தலை வர் டி வில்லியர்ஸ் தெரிவானார்.

போட்டியில் படைக்கப்பட்ட சாதனை கள் சுருக்கமாக:
அதிவேக சதம்
டி வில்லியர்ஸ் (தெ.ஆ) 31 பந். எதிர் மே.தீ. ஜெகன்னஸ்பேர்க் 2015, கோரி அண்டர்சன் (நியு) 36 பந். எதிர் மே.தீ (குயின்ஸ்ரவுண் 2014)
அதிவேக அரைசதம்
டி வில்லியர்ஸ் (தெ.ஆ) 16 பந்.எதிர் மே.தீ. ஜெகன்னஸ்பேர்க் 2015, ஜெயசூர்ய (இலங்) 17 பந். எதிர் பாக். சிங்கப்பூர் 1996
16 சிக்ஸர்கள்
இப்போட்டியில் 16 சிக்ஸர்களை விளா சிய டி வில்லியர்ஸ் இந்தியாவின் ரோஹித் சர்மாவுடன் (16 சிக்ஸ் எதிர் ஆஸி பெங்களூர் 2013) முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.
தவறிய சாதனை
மொத்த ஓட்ட எண்ணிக்கை
இலங்கை  443/9 எதிர் நெதர்லாந்து 2006, தென்னாபிரிக்கா 439/2 மே.தீ 201
5

ad

ad