அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு உரிய ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் மக்கள் ஆணை பெற்றுக்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை மையிலான அரசாங்கம் நூறு நாள் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
இந்த திட்டத்திற்கு நாடாளுமன்றின் ஒத்து ழைப்பு அவசியமாகின்றது.
நாடாளுமன்றம் உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்கத் தவறினால், புதிதாக மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்ளத் தயங்கப் போவதில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் இந்த நூறுநாள் திட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெமட்டகொட பொதுச் சந்தைக் கட்டட அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.