ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் படுகொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அண்மைக் காலமாக பணயக் கைதிகளை தீயிட்டு எரித்துப் படுகொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 45 பேரை எரித்துப் படுகொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
ஈராக்கில் 45 பேரை ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் எரித்து கொலை செய்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக்கின் மேற்கு மாகாணமான அன்பாரில் இந்த கொடூர சம்பவத்தை ஐ.எஸ்.ஐ. எஸ். தீவி வாதிகள் அரங்கேற்றியுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் எரித்து கொன்றவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான தகவலின்படி, பொலிஸ் அதிகாரி கர்னல் காசிம் அல்-ஓபெய்டி பேசுகையில், 45 பேர் மேற்கு அல்-பாக்தாதிடவுனில் எரித்துக் கொல்லப்பட்டனர்.
கொலை செய்யப்பட்டவர்கள் அல்பு-ஒபிட் சன்னி பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்கள், இவர்களில் பொலிஸாரும் அடங்குவர் என்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விமானத்தளம் அமைந்துள்ள பகுதியையொட்டி அல்-பாக்தாதி டவுனில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்று வருகிறன.
ஈராக்கில் பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் பணியில் உலகநாடுகளின் படை ஈடுபட்டுள்ளது.
இராணுவ வீரர்களின் குடும்பங்கள் உள்ள பகுதியையும் ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிடித்தனர் என்று தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான உலகநாடுகளின் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
நாளுக்கு நாள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் வெறியாட்டம் அதிகரித்துவரும் நிலையில் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்த செய்துள்ளது. அன்பார் மாகாணத்தில் 80 சதவீதம் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பிடியிலே உள்ளது என்று கூறப்படுகிறது.
அமெரிக்க படையை சேர்ந்த வீரர்கள் இங்கு ஈராக் படை பிரிவுக்கும் ஈராக் இராணுவத்தின் துணை படைபிரிவுகளுக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க
து