புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2015

சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் வாதம் நிறைவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்றுடன் முடிவடைந்தது. தனியார் நிறுவனங்கள் தரப்பு வாதம் தொடங்கியுள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கும் முன்பாக, நீதிபதி குமாரசாமி
அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கிடம், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி குறித்து பல கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு அவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லையென பவானி சிங் பதிலளித்தார். பின்னர் அரசுத் தரப்பு வாதம் எப்போது தொடங்கும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். மனுதாரர்களின் வாதம் முடிந்தவுடன் அரசுத் தரப்பு வாதம் தொடங்கும் என பவானிசிங் தெரிவித்தார்.

இந்த வழக்கில் சுதாகரன் தரப்பு வாதம் நேற்றோடு முடிவடைந்து இளவரசி தரப்பில் வாதம் தொடங்கியது. 1991 முதல் 1996 வரை இளவரசியின் வருவாய் செலவு ஆவணங்களை சமர்ப்பித்த அவரது வழக்கறிஞர், ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள சிறுதாவூர் பங்களாவை 4 கோடி ரூபாய் என அரசு தரப்பில் உயர்த்திக் காட்டியுள்ளதாக வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதிக்கும், வழக்கறிஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. சொத்துக்குவிப்பு வழக்கு பொய் வழக்கு என நிரூபிக்கும் வகையில் எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை என நீதிபதி கூறினார்.

வாய்மொழியான வாதங்களை வைத்து தீர்ப்பளிக்க முடியாது என்றும், ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் அடிப்படையில்தான் சரியான தீர்ப்பு வழங்க முடியும் என்றும் நீதிபதி கண்டித்ததோடு வழக்கு 20ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.

தொடர்ந்து இளவரசி தரப்பு வாதம் இன்று தொடங்கியது. வழக்கறிஞர் சுதந்திரம் தனது வாதத்தை முன்வைத்து நிறைவு செய்தார். சுதாகரன், இளவரசி தரப்பில் வழக்கறிஞர் சுதந்திரம் தலா 6 நாட்கள் வாதாடினார்.

31 நாள் விசாரணையில் ஜெயலலிதா, சசிகலா தரப்பில் தலா 9 நாட்கள் வாதம் நடைபெற்றது. தற்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தனியார் நிறுவனங்களின் வாதம் தொடங்கியுள்ளது.

ad

ad