உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 லிருந்து 48 அணிகள் பங்குபெறும் வகையில் விதிகளை மாற்றி அமைப்பேன் என்று ஃபிஃபா தலைவர் பதவிக்கு போட்டியிடும் போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் லூயீஸ் ஃபிகோ வாக்குறுதி அளித்துள்ளார்.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் மே மாதம் 29ஆம் தேதி நடைபெறுகிறது. சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள ஃபிஃபா தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில் 4 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.
தற்போதைய ஃபிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டரும் 5வது முறையாக மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போர்ச்சுக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளின் ஜாம்பவான் லுயீஸ் ஃபிகோவும் களமிறங்குகிறார். இந்த தேர்தலில் ஃபிகோவுக்கும் ஜோசப் பிளேட்டருக்கும்தான் நேரடி போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர்ச்சுக்கல் அணிக்காக 1991 முதல் 2006ஆம் ஆண்டு வரை 127 போட்டிகளில் விளையாடியுள்ள ஃபிகோ 32 கோல்களை அடித்துள்ளார். பார்சிலோனா, ரியல் மாட்ரிட், இன்டர்மிலன் போன்ற அணிகளுக்காகவும் விளையாடி சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளார். இவரது பிரபலமே தனக்கு வெற்றியை தேடி தரும் ஃபிகோ நம்புகிறார். தேர்தலில் தனக்கு ஆதரவு கேட்டு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், நேற்று லண்டன் வந்தார். அப்போது, தான் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் உலகக் கோப்பை போட்டியில் 40 முதல் 48 அணிகள் பங்கேற்கும் வகையில் மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள்ளதாக வாக்குறுதி அளித்தார். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 அல்லது 5 அணிகள் பங்கேற்கும் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று ஃபிகோ நம்புகிறார்.
கடந்த 1998ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜோசப் பிளேட்டர்தான் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருந்து வருகிறார். அவருக்கு ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளின் ஆதரவு இருப்பதாலாயே தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றி பெற முடிகிறது என்பதால், இதனை உடைக்கும் வகையில் இத்தகையை வாக்குறுதியை ஃபிகோ அளித்துள்ளதாக கருதப்படுகிறது.