புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2015

அகதிகளை அனுப்பி உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்துவோம்: ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்



லிபியாவில் உள்ள ஐ.எஸ் அமைப்பினரை அடக்க முயற்சித்தால், ஐரோப்பாவிற்குள் 5 லட்சம் அகதிகளை அனுப்பி உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இத்தாலியிலுள்ள பத்திரிக்கை ஒன்று, தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து பதிவு செய்யப்பட்ட ரகசிய தகவல்களை வெளியிட்டிருந்தது.
அதில், ஐ.எஸ் அமைப்பினரை முடக்கும் நோக்கில் எதிராக செயல்பட்டால், லிபியாவிலிருந்து கடல் மார்க்கமாக 5 லட்சம் அகதிகளை ஐரோப்பாவிற்குள் அனுப்பி, உளவியல் ரீதியான தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மிரட்டியுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
5 லட்சம் அகதிகள் படகுகள் மூலம் அனுப்பப்பட்டால், அவர்களில் பலர் கடலில் மூழ்கிவிடும் ஆபத்து உள்ளதாகவும், ஒரே சமயத்தில் 5 லட்சம் அகதிகள் நுழைந்தால் அவர்களால் ஐரோப்பிய நகரங்களில் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Quilliam என்ற தீவிரவாதத்திற்கு எதிரான அமைப்பிற்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, தீவிரவாதிகள் லிபியாவில் ஏற்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை உறுதிபடுத்திய பின்னர், அகதிகள் என்ற பெயரில் ஐரோப்பாவிற்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இத்தாலியிலுள்ள பல விமான நிலையங்களில், குறிப்பாக Lampedusa விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான அகதிகள் வருவதால், அவர்களை ஒழுங்குபடுத்தி பரிசோதனை செய்வதில் கால தாமதம் ஏற்படும் இந்த சமயத்தில் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை அச்சுறுத்தலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் விடுத்துள்ள மிரட்டல் குறித்து பேசிய இத்தாலியின் உள்துறை அமைச்சர் Angelino Alfano, நிமிட நேரங்கள் கூட தாமதமாகமால், அகதிகளுக்கு ஆதரவு அளிப்பதில் லிபியா நாட்டிற்கு அதிக அளவில் முன்னுரிமை அளித்துவருவதாக தெரிவித்தார்.
ஆனால், அகதிகளுக்கான சர்வதேச சட்டத்திட்டங்களை மீறி அதன் அதி வேகமாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் அகதிகளை அனுப்புவது, இத்தாலிய வரலாற்றில் இதுவரை நடந்தது இல்லை என்றும் அதை சமாளிப்பது மிகவும் கடினம் எனவும் தெரிவித்துள்ளார்.

ad

ad