புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2015

சென்னையில் பெண்ணை கொலை செய்து 80 சவரன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம்: 3 பேர் கைத



சென்னை திருமுல்லைவாயிலில் வீட்டில் தனியாக இருந்த அன்னலதா என்ற பெண்ணை கொலை செய்து, 80 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமுல்லைவாயிலில் வீட்டில் தனியாக இருந்த அன்னலதா என்பவர் கொலை செய்யப்பட்டார். 3 மாதமாக கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் வெங்கடாஜலபதி நகரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான சுமன் என்பவரை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது நண்பர்கள் முகமது ராஜா, அன்பு ஆகியோருடன் சேர்ந்து, அன்னலதாவை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துது தெரிய வந்தது. 

இதையடுத்து 3 பேரையும் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்,அவர்களை புழல் சிறையில் அடைத்தனர். 

ad

ad