புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2015

மூன்றே மூன்று சிங்கிள்ஸ்... மற்றதெல்லாம் சிக்சும் பவுண்டரியும்தான்!

லகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில், இங்கிலாந்தை மண்டியிட வைத்த நியூசிலாந்து கேப்டன் பிரான்டன் மெக்கல்லம் அடித்த 77 ர
ன்களில் மூன்றே மூன்றுதான் சிங்கிள்ஸ். மற்றதெல்லாம் சிக்சும் பவுண்டரியுமாக வந்த ரன்களே.
நியூசிலாந்து அணிக்கு, இங்கிலாந்து அணி 123 ரன்களை வெற்றி இலக்காக வைத்தபோது அந்த அணி எளிதாக எட்டி விடும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் இந்த 123 ரன்களை, தனது சாதனையை தகர்க்க மெக்கல்லம் பயன்படுத்திக் கொள்வார் என்பதுதான் இங்கிலாந்து வீரர்கள் எதிர்பாராததது.

தொடக்க வீரராக களமிறங்கிய மெக்கல்லம் சந்தித்தது 25 பந்துகளைதான்.. அதில் 6 பந்துகளை அவர் அடிக்கவில்லை அல்லது ரன் எடுக்கவில்லை. 3 பந்துகளில் சிங்கிள்ஸ் ஓடியுள்ளார். மீதமிருந்த 17 பந்துகளில் 8 பவுண்டரிகளும் 7 சிக்சர்களையும் விளாசித் தள்ளினார். 18 பந்துகளில் அரை சதமடித்தது உலகக் கோப்பையில் சாதனை படைத்த அவர், 16 பந்துகளில் எட்டியிருந்தால் தென்ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்சின் ஒரு நாள் போட்டியில் மிக விரைவாக அடிக்கப்பட்ட அரை சத சாதனையையும் முறியடித்திருப்பார்.

இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் கனடா அணிக்கு எதிராக 20 பந்துகளில் மெக்கல்லம் அரை சதமடித்திருந்தார். தற்போது அந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஃபின்னின் ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் உள்பட 29 ரன்கள் அடித்தது ரசிகர்களுக்கு கடும் உற்சாகத்தை தந்தது.  இத்துடன் 21 பந்துகளுக்குள் மெக்கல்லம் 5 முறை அரை சதத்தை கடந்துள்ளார். இந்த வரிசையில் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி  9 முறை 21 பந்துகளுக்குள் அரை சதம் அடித்துள்ளார்.

ad

ad