புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2015

சூப்பர்சிங்கர் பட்டத்தை கைப்பற்றினார் ஸ்பூர்த்தி: தங்கம் வென்ற ஜெசிக்கா

உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான இறுதிச்சுற்று இன்று சென்னையில் நடைபெற்றது.
பல கட்டத்தேர்வுக்கு பின்னர் இறுதிச்சுற்றில் பரத், அனுஷ்யா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி, ஹரிப்ரியா, சிரிஷா ஆகிய 6 பேர் போட்டியிட்டனர்.
அனைவரையும் மெய்மறக்கச் செய்த ஸ்பூர்த்தி மக்கள் ஓட்டுக்கள் மற்றும் நடுவர்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் வெற்றிபெற்று சூப்பர் சிங்கர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். மேலும் 60 லட்சம் மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி வீட்டை வென்றுள்ளார்.
இதில் ஈழத்தமிழ் சிறுமியான ஜெசிக்கா இரண்டாவது இடத்தை பெற்று 1 கிலோ தங்கத்தையும், ஹரிபிரியா மூன்றாம் இடத்தை பிடித்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரையும் பரிசாக வென்றனர்.
மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஸ்பூர்த்தி மற்றும் ஜெசிக்காவுக்கு உலகத்தமிழர்கள் சார்பாக சினிஉலகத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ad

ad