உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம்சிங் பேரன்- ராஷ்ட்டிரிய ஜனதாதள தலைவர்
லாலு மகள் இல்லத் திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
முலாயம்சிங் மூத்த பேரன் தேஜ்பிரதாப்புக்கும், ராஷ்ட்டிரிய ஜனதாதள தலைவர் லாலு மகள் ராஜலட்சுமிக்கும் திருமணத்திற்கு முன்னதான திலக் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட சிறப்பு அழைப்பை ஏற்று அவர் இந்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார்.
இவரை லாலுவும், முலாயம்சிங்கும் இணைந்து வரவேற்றனர். மேலும் இரு குடும்ப குழந்தைகளை பிரதமர் மோடி அருகில் அழைத்து அன்பாக பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த விழாவில் மோடி இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் அரசியல் விருப்பு, வெறுப்பு குறையும் என்றே கூறப்படுகிறது.
மேலும் பாலிவுட் நடிகர்கள், பாடகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
மோடியின் வருகையையொட்டி எட்டாவா பகுதியில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள சைபாய் கிராமம் எங்கு பார்த்தாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேசம், பீகார், குஜராத் மாநில பாரம்பரிய உணவுவகைகள் இடம் பெற்றிருந்தது.
இவர்களின் திருமணம் வரும் 26ஆம் தேதி நடக்கிறது. இந்த திருமண விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பங்கு பெற அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.