கடந்த 15 ஆம் திகதி யங் றோயல் கழகத்தினால் நடத்தப்பட்ட உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின்போது 2014 இல் நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரருக்கான விருது
ஒன்றினை வழங்கி கௌரவித்தார்கள் இதற்கென யன்க்ச்டார் இல் இருந்து பிரதீஸ் சின்னதம்பி யசிதன் விசயகுமார் நிஷாத் சதானந்தன் ஆகியோரும் றோயலின் யாசித்தான் நிஷாந்த் மற்றும் தாய்மண் ப்ளூஸ் டார் வீரர்கள் ஒவ்வொருவருமாக 7 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர் இவர்களில் இருந்து யங் றோயல் கழகத்தின் தெரிவுக் குழு பிரதீசை தெரிவு செய்து கௌரவித்தது பாராட்டுக்கள் 22 வயதான பிரதீஸ் சின்னதம்பி பலமுள்ள ஒரு பின்னணி பாதுகாப்பு வீரராக இருந்தும் தேவையான நேரங்களில் முன்னணி த்கக்குதல் வீரராகவும் செயல் படும் அபார திறமை மிக்கவர் ஏந்தக ஒரு இக்கட்டான கட்டத்திலும் தனது அணிக்காக கடைசி நிமிசத்திலும் அகோரத் தாக்குதலில் ஈஎடுபட்டு போட்டியின் முடிவையே மற்ற வல்ல அற்புத திறமை கொண்டவர் 2013 றோயல் சுற்றில் டோத்முண்டுடனும் 2013 ஐரோப்பிய தமிழீழ கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியுடனும் இது போன்ற கோல்களை அடித்து கழகத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் யங் ஸ்டாரின் மூன்று வீரர்களுமே புங்குடு தீவு மண்ணை சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்