புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2015

ஈழத்தமிழர்களுக்கு தங்கம் வழங்கிய சூப்பர்சிங்கர் ஜெசிக்கா

ஈழத்தமிழர்களுக்கு தங்கம் வழங்கிய சூப்பர்சிங்கர் ஜெசிக்கா - Cineulagam
உலகத்தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

கடந்த சில வருடங்களாக மக்களின் பேராதரவை பெற்றுவரும் இந்த சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிச்சுற்று இன்று சென்னையில் நடைபெற்றது.
6 பேர் பங்கேற்ற இந்த இறுதிச்சுற்றில் மக்களின் பேராதரவில் வைல்ட்கார்டு சுற்றில் வெற்றி பெற்ற ஈழத்தமிழ் சிறுமி ஜெசிக்கா இரண்டாம் இடம் பிடித்து 1 கிலோ தங்கம் வென்றார்.
கனடாவில் வசிக்கும் இவர் இந்த தங்கத்தில் பாதியை இந்தியாவில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றுக்கும், மற்றொரு பாதியை ஈழத்தில் வாழும் அனாதை குழந்தைகளுக்கும் வழங்கி அனைவரின் மனதையும் மீண்டும் ஒருமுறை வென்றுள்ளார்.

ad

ad