இதனையடுத்து, மீட்கப்பட்ட பெண்ணை மீட்புப் படையினர் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
பெண் ஒருவர் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியுள்ளார் என மீட்புப் படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, மீட்புப் படையினர் மேற்கொண்ட தேடுதலின் மூலம் குறித்த பெண் காப்பாற்றப்பட்டதாக இது குறித்து கருத்து தெரிவித்த பேரிடர் படை உதவித் தளபதி குளிஷ் ஆனந்த் தெரிவித்தார்.
இந் நிலநடுக்கத்தில் ஏறக்குறைய 6500 பேர் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.