19ம் திருத்தச் சட்டம் குறித்த இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆதரவாக வாக்களித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச, அவைக்கு சமூகமளிக்கவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மட்டும் இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால சில்வா உள்ளிட்ட நாடாளுமன்றின் 215 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பசில் ராஜபக்ச, கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் இன்று பங்கேற்கவில்லை.
இன்னும் சற்று நேரத்தில் மூன்றாம் குழு நிலை விவாதமும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது