புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2015

ஜனாதிபதியின் உறுதிமொழியை அடுத்து மாதுலுவாவே தேரரின் சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது


 
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை நிறைவேற்றும் வரை இன்று முதல் சத்தியாக்கிரத்தை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருந்த கோட்டை நாகவிகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளருமான மாதுளுவாவே சோபித தேரர் தனது சத்தியாக்கிரக போராட்டைத் கைவிட்டுள்ளார். 
 
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதால் தான் திட்டமிட்டிருந்த சத்தியாக்கிரக போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் அறிவித்துள்ளார். 
 
இதேவேளை 19ஆவது அரசியல் அமைப்புத் திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கோரி கோட்டே நாகவிகாரதிபதி மாதுளுவாவே சோபித தேரர் தலைமையில் இராஜகிரியவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது 
 
இந்த ஆர்ப்பாட்டம் பொறளை ஆயுர்வேத சுற்றுவட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி நாடாளுமன்ற சுற்றுவட்டம் வரை பேரணியாக சென்றது.
 
இதன் காரணமாக குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.
 
மக்கள்இ சிவில் அமைப்புகள்,கலைஞர்கள்,அரசியல் கட்சிகள் இணைந்து 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றக்கோரி மேற்கொள்ளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் இணைந்துகொண்டார்.

ad

ad