புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2015

ஓரிரு நாட்களில் மகிந்தாவின் மனைவியும் மகனும் கைதாகலாம்


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவையும், அவரது மகன் யோசித ராஜபக்சவையும், கைது செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவர்கள் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராகவும், யோசித ராஜபக்சவுக்கு எதிராகவும், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஏற்கனவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எதிர்வரும் சில நாட்களுக்குள் இவர்கள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள 19வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ள நிலையில்,
இவர்களைக் கைது செய்வதன் மூலம் 19வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றாமல் தடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad