நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா யாழ் இந்துக்கல்லூரி
மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண நிதித்துறை பிரதி பிரதம செயலாளர் இ.பத்மநாதன் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் எஸ்.எம்.ராஜாரணசிங்க, கௌரவ விருந்தினராக யாழ் இந்துக் கல்லூரி அதிபர் தயானந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் விளையாட்டு விழாவின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக நிகழ்வு மிக எளிமையாக நடைபெற்றது. போட்டியின் இறுதியில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.