ஜெயலலிதா தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விரைவில் விடுதலை ஆவார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
குமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஜெயலலிதாவைவிட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய பலர் விடுதலையாகி இருக்கும் நிலையில் அவரும் விடுதலையாவார் என நினைக்கிறேன். அதற்காக ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசுவதாக நினைக்கக் கூடாது. கடந்த தேர்தல்களில் காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராகவும், தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்துவோம். ஜாதி அடிப்படையில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம். யார் மக்களுக்கு நன்மை செய்வார்களோ அவர்களை நிறுத்துவோம் என்றார்.