கிளிநொச்சி - அறிவியல் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த சரக்கு ரயிலுடன் கார் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் கடவையினை கடக்க முற்படும் போதே இந்தவிபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.