புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2015

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

 
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து பொள்ளாச்சியில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

ஆந்திரத்தில் 20 தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இதுதொடர்பாக ஆந்திர காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், செம்மரக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்படுபவர்களைக் கண்டறிய வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி பொய் பிரசாரம் செய்து வருகிறது. பாஜக மத அடிப்படையில் செயல்படாது. புதிதாக உருவாகியுள்ள ஜனதா கூட்டணி சந்தர்பவாதக் கூட்டணியாகும். இந்தக் கூட்டணி விரைவில் உடைந்துவிடும்.

வருகிற 2016ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அந்த விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வலு நிறைந்ததாக மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. வலுவானதாக உள்ளதால் அதிமுக உடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் நாளையே தேர்தல் வந்தாலும் பாஜக அச்சப்படவோ, ஒதுங்கி நிற்கவோ செய்யாது. தேர்தலுக்கு தயாராக உள்ளது என்றார்.

ad

ad