புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2016

தீக்குளித்த விக்னேஷ் எழுதிய கடிதம்!



மாணவர்களே கோபம் கொள்! நம் உரிமைகளை மீட்க போராடுங்கள்!



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் காவேரி உரிமை மீட்புப் பேரணி சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் சேரன், அமீர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். 

பேரணியில் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அங்குள்ளவர்கள் தடுத்து நிறுத்தினர். தீக்குளிக்க முயன்றவர் நாம் தமிழர் கட்சியின் மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரிய வந்தது. அவரை கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தீக்குளிப்பதற்கு முன்பு விக்ணேஷ் எழுதிய கடிதம்....

* காவேரியில் நீரை பெற்று விவசாயத்தை மீட்டு எடுக்க போராடுங்கள்.

* என் தாய்மண் மன்னார் குடியில் விவசாய நிலங்கலில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த     போராடுங்கள்.

* எம் மண்ணை மலடாக்கும் மனனையில் இயங்கும் சாராய ஆலையை மூட போராடுங்கள்.

* இந்தி திணிப்பால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று 800 க்கும் மேற்ப்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். அதுபோல புதிய கல்விக்கொள்கையால் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டு நம் தாய்மொழி சாகக்கூடாது என்பதற்காக முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும் அதற்காக போராடுங்கள்.

* நம் மண்ணில் அந்நிய முதலீட்டை தவிர்த்து தமிழ்த்தேசிய முதலாளிகளை உருவாக்க போராடுங்கள்.

* நான் வைத்த கோரிக்கைகள் சரியாக இருப்பின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடும் தமிழர்களுக்கு இனி வாக்குச் செலுத்துங்கள்

இவன்: பா. விக்னேஷ்

திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளர்.



ad

ad