புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2016

ரயில் மறியல்: கன்னட சலுவாளிக் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கைது

Vatal-Nagaraj
காவிரி விவகாரம் தொடர்பாக மாண்டியா ரயில் நிலையம் அருகே ரயில் மறியலில் ஈடுபட
முயன்ற கன்னட சலுவாளிக் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதை கண்டித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகாவில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூரு, மாண்டியாவில் கன்னட அமைப்பினர் ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதேபோல் பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்ற கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜையும் அவரது ஆதரவாளர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கன்னட ரக்ஷ்ன வேதிகே அமைப்பினரையும் போலீசார் கைது செய்தனர். எனினும், இந்த ரயில் மறியல் காரணமாக ரயில் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. வழக்கம் போல் அனைத்து ரயில்களும் இயங்கி வருவதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரும், துணை ராணுவ அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

ad

ad