புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2018

தாய் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் நாமல் ராஜபக்‌ஷ

பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்‌ஷ உத்தரவிட்டதாக தனது தாய் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லையென நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது கடந்த 5ஆம் திகதி வீடொன்றிலிருந்து 5 நாட்கள் உணவு வழங்கப்படாமல் கட்டிவைக்கப்பட்டிருந்த நாயொன்று பெண்ணொருவரால் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டதாகவும் இதனையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளர் சார்பில் முன்வந்த ஷிரந்தி ராஜபக்‌ஷ அன்று மாலையே நாயை மீட்டெடுத்த பொலிஸாரின் இடமாற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுத்தாரென சர்மினி சேரசிங்க என்ற பெண் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்தே சமூக வலைத்தளங்களில் ஷிரந்தி குறித்து அவதூறுகள் பரப்பப்படுவதாகவும், அதில் எவ்வித உண்மையுமில்லையென பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்‌ஷ தனது தாய் மிருகங்கள் மீது மிகுந்த இரக்கமுடையவரெனவும் பதிவிட்டுள்ளார்.

ad

ad