www.pungudutivuswiss.com
தமிழீழக்கிண்ணம் ஸ்விட்சர்லாந்து ஆகஸ்ட் 8/ 9 சனி/ ஞாயிறு..2026
----------------------------------
தமிழர் விளையாட்டு விழா ஸ்விட்சர்லாந்தில் எதிர் வரும் ஆகஸ்ட் எட்டாம் ஒன்பதாம் திகதிகளில் சுவிஸ் விளையாட்டு துறை நடத்துகின்ற மாபெரும் தமிழர் விளையாட்டு விழா விண்டத்தூர் நகரில் வழமை போல் விமரிசையாக நடைபெறுகிறது 2009 ஈழப் போர் மௌனிப்புக்கு பின்னர் புலம்பெயர் தேசங்களில் எமது மண்ணின் அடையாளத்தை தக்கவைக்கும் வகையில் இளம் தலைமுறையினருக்கு எமது தாயகத்தின் சிந்தனைகளை நோக்கத்தை விதைத்து செல்லும் செயல்பாடுகளில் பங்களிக்கும் ஒரு முயற்சியின் எடுத்துக்காட்டு இந்த விளையாட்டு விழா கனடா மற்றும் ஐரோப்பா முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்களும் கழகங்களும் பயிற்சியாளர்கள் பார்வையாளர்களும் பங்கு பற்றுவார்கள் நடைபெறும் இந்த விழாவினை விளையாட்டுத்துறையும் தமிழர் இல்லமும் சுவிஸ் தமிழர் உதை பந்தாட்ட சம்மேளனமும் ஒன்றிணைந்து சிறப்பாக நடத்தி வருகின்றன மேற்கத்திய நாடுகளின் பாணியில் திட்டமிட்டு பாரிய ஒழுங்கு அமைப்பில் பெரும் பொருள் செலவில் பலரும் வியக்கத்தக்க வகையில் இந்த விழா நடத்தப்பட்டு வருகின்றது வளர்ந்தோர் ஜூனியர் வயது பிரிவு உதை பந்தாட்ட சுற்று போட்டிகள் மென் பந்தாட்ட சுற்று ப்போட்டி சுதேச விளையாட்டுக்கள் மெய் வல்லுனர் போட்டிகள் என்றெல்லாம் களைகட்டும் இந்த விளையாட்டு விழா இம்முறையும் சிறப்பாக நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன
Weniger anzeigen


