-
8 அக்., 2025
சரத் பொன்சேகாவுக்கு ஏன் சர்வதேசம் தடைவிதிக்கவில்லை? [Wednesday 2025-10-08 06:00]
![]() வசந்த கரன்னகொட, சவேந்திர சில்வா, கமல் குணரத்ன போன்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதோடு, அவர்களுக்கெதிராக தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் யுத்தத்திற்குத் தலைமை தாங்கிப் பிரபாகரனைக் கொன்ற அப்போதைய இராணுவத்தளபதியான சரத் பொன்சேக்காவுக்கு ஏன் சர்வதேசம் தடை விதிக்கவில்லை? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கேள்வியெழுப்பினார் |
என் வரலாறு தெரியாமல் மோதுகிறார் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர்! [Wednesday 2025-10-08 06:00]
![]() இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க எனக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். குறித்த பதவியை வகிப்பதற்கான அடிப்படை தகுதியைக் கூட பூர்த்தி செய்யாத அவரது அச்சுறுத்தலால் என்னை ஒருபோதும் மௌனிக்கச் செய்ய முடியாது. அவரது தகுதிகளை நான் நிரூபிக்க முன்னர் அவர் தானாகவே பதவியை இராஜிநாமா செய்வதே சிறந்ததது என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார் |
7 அக்., 2025
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்! [Tuesday 2025-10-07 16:00]
![]() நிலையான நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியது மிக அவசியம் எனப் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது |
யாழ். தனியார் விடுதிகளின் பெயர்களை பயன்படுத்தி புதிய மோசடி! [Tuesday 2025-10-07 16:00]
![]() யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றது |
ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்தது அரசாங்கம்! [Tuesday 2025-10-07 16:00]
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. |
யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணிகள் போராட்டம்! [Tuesday 2025-10-07 16:00]
![]() நீதிமன்ற அனுமதியின்றி காவல்துறையினர் ஒரு வழக்கறிஞரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை செய்ததாகக் குற்றம் சாட்டி, யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞர்கள், செவ்வாய்க்கிழமை(07) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
இந்தோனேசியப் பள்ளி இடிபாடுகளில் பலி எண்ணிக்கை 60-ஐ தாண்டியது

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்
காசா சமாதான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
ரஷ்ய ட்ரோன்களில் பிரித்தானிய உதிரி பாகங்கள்: அம்பலப்படுத்திய உக்ரைன் ஜனாதிபதி! [Tuesday 2025-10-07 07:00]
![]() உக்ரைன் மீது ஞாயிறன்று நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன்களில் பிரித்தானியாவின் உதிரி பாகங்கள் காணப்பட்டதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பிரித்தானிய மைக்ரோ கம்ப்யூட்டர்கள் உட்பட 100,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு உதிரி பாகங்கள் அந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் |
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரையுங்கள்! [Tuesday 2025-10-07 07:00]
![]() தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ்சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் தாருங்கள் என ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளிடம் சிறீதரன் வேண்டுகோள் விடுத்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். |
இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கு எந்த அரசும் தயாரில்லை! [Tuesday 2025-10-07 07:00]
![]() ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மே மாதம் 16ஆம் திகதி விடுதலைப்புலிகள் என்னிடம் கூறினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் |
அன்னபூரணி அம்மாளின் கப்பல் அமெரிக்கப்பயணம் - 1938
6 அக்., 2025
வாக்கெடுப்பின்றி நிறைவேறியது இலங்கை குறித்த தீர்மானம்! [Monday 2025-10-06 16:00]
![]() இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. |
காணி உறுதி மோசடி- பெண் சட்டத்தரணி கைது! [Monday 2025-10-06 16:00]
![]() யாழ்ப்பாணத்தில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே கைது செய்யப்பட்டுள்ளார் |
கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. |
வாக்கெடுப்பின்றி நிறைவேறியது இலங்கை குறித்த தீர்மானம்! [Monday 2025-10-06 16:00]
![]() இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. |
"விஜய் அரசியலுக்கு தகுதியே இல்லாதவர்" - நக்கீரன் கோபால்! [Sunday 2025-10-05 18:00]
தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு தகுதியில்லாதவர் என நக்கீரன் கோபால் கூறியுள்ளார். கரூர் துயர சம்பவம் குறித்து பேசிய நக்கீரன் கோபால், 41 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட மரண பலி என்றும், நரபலிக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் குறிப்பிட்டார். திருவாரூரில் தவெக கூட்டம் நடந்தபோது அசம்பாவிதம் நேர்ந்திருக்கும். ஆனால் தாலுகா அலுவலகத்தை அதன் பாதுகாவலர் நெரிசலின்போது திறந்துவிட்டதால் 500 பேர் உள்ளே போய் தப்பித்ததாக செய்தி. |
அமெரிக்க வீரரின் செயல் சர்ச்சை: குகேஷின் காயை ரசிகர்களை நோக்கி வீசிய ஹிகாரு நகாமுரா Posted by By tamil

இந்திய வீரர் குகேஷுடன் நடந்த செஸ் போட்டியில், அ
சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் நேரடி விமான சேவை
கொழும்புக்கும் சூரிச் நகரத்திற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்க எடெல்வைஸ் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
குமரப்பா -புலேந்திரன் நினைவுத்தூபியை இடித்தழித்தவர் நகரசபையுடன் முரண்பாடு! [Monday 2025-10-06 07:00]
![]() சாவகச்சேரி - நுணாவில் சந்தியில் அமைந்திருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடித்தழிக்கப்பட்டது. அதனை இடித்தவர் மீண்டும் அந்த நினைவுத் தூபியை கட்டித் தருவதாக சாவகச்சேரி நகரசபையினருக்கு வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இதுவரை அந்த தூபி அமைக்கப்படவில்லை |
அத்துடன் அதனை இடித்தழித்த நபர் தூபியை கட்டித் தர முடியாது என்று தற்போது பிரதேச சபையினருடன் முரண்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. |
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை மரபணுச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்! [Monday 2025-10-06 07:00]
![]() செம்மணியில் மீட்கப்பட்ட மனித என்பு கூட்டுத்தொகுதிகளை சர்வதேச நிபுணர்கள் மூலம் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தங்களுக்கான நீதி கண்டறியப்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது |
ரணிலை விட அனுரவுக்கான ஒதுக்கீடு 72 வீதம் அதிகம்! [Monday 2025-10-06 07:00]
![]() ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியிருக்கின்றார். இது 2024இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான செலவை விட 72 சதவீத அதிகரிப்பாகும். இவ்வாறு பாரியளவு நிதி ஒதுக்கீட்டுக்கான காரணத்தை ஜனாதிபதியும், அரசாங்கமும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். |
ஜெனிவா வரைவில் மீண்டும் இனமோதல்- வாக்கெடுப்பை கோராது இலங்கை! [Sunday 2025-10-05 16:00]
![]() இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் "இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்" எனும் தலைப்பிலான புதிய பிரேரணையின் இறுதி வரைவில் “இனமோதல்” என்றசொற்பதம் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. |
சரிகமப - வில் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகும் ஈழத்தமிழன்... நடுவர்களே உறைந்துபோன தருணம்
5 தனிப்படையால் அசைக்கவே முடியவில்லை: இளைஞர்கள் ஆனந்திற்கு கொடுக்கும் பாதுகாப்பு ! Posted by By user

புஷி -ஆனந்தின் மோபைல் போன் கடைசியாக, Switch Of
5 அக்., 2025
செலவைக் குறைக்க சுவிஸ் விமானங்களில் இந்திய பணியாளர்கள்! [Saturday 2025-10-04 17:00]
![]() சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், செலவுகளைக் குறைக்கும் நோக்கில், கனடாவின் மொன்றியல் நகருக்கு இந்திய கபின் பணியாளர்களை சேவையில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கபின் பணியாளர்களின் சம்பளம் மாதத்திற்கு 580-950 சுவிஸ் பிராங் என செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என சுவிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். |
யாழ்ப்பாணத்தில் காற்றுடன் மழை - 3 குடும்பங்கள் பாதிப்பு! [Sunday 2025-10-05 06:00]
![]() காற்றுடன்கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் முன்று குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார் |
நல்லூரில் பெருந்தொகை வெளிநாட்டு நாணயம், நகைகள் கொள்ளை- பிரதான சந்தேக நபர் கைது! [Sunday 2025-10-05 06:00]
![]() யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் நாணயம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் |
லிதுவேனியாவின் வில்னியஸ் விமான நிலையத்தில் வான்வழிச் விமானப் போக்குவரத்து இடைநிறுத்தம்
இதனால், வில்னியஸை நோக்கிய பல விமானங்கள் மாற்று இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், “கவனம்: வில்னியஸ் விமான
"41 சாவுகள் கன்னத்தில் அறைந்துசொன்ன பாடம் இதுதான்" - வைரமுத்து பதிவு! [Saturday 2025-10-04 17:00]
கரூர் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார். தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. களை எக்ஸ்தளத்தில் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு பதிவை கரூர் துயரம் குறித்து எக்ஸ் தளத்தில் இட்டுள்ளார். |
தவெக தலைவர் விஜய் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறாரா? [Saturday 2025-10-04 17:00]
![]() கரூர் சம்பவத்தையடுத்து தவெக தலைவர் விஜய், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கரூர் துயர சம்பவத்தையடுத்து ஆளும் திமுக அரசு மீது பாஜக பழி சுமத்தியது. அதிகாரிகளின் அலட்சியத்தை குற்றம்சாட்டியதுடன் விஜய்யை அறிக்கைகளில் இருந்து விலக்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அரசியல் மறுசீரமைப்புக்கான சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருவதாக தெரிகிறது |
உக்ரைன் சுமி ரயில் நிலையத்தில் ரஷ்யாவின் கொடூர தாக்குதல்
சுமி பிராந்தியத்தில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையம். இந்த நிலையம் ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 50 கி.மீ. (30 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
காயமடைந்தவர்கள் பயணிகளாகவும், ரயில்வே ஊழியர்களாகவும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான ரயில்களில் ஒன்று ஷோஸ்ட்காவிலிருந்து தலைநகர் கீவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஆகும்.
தாக்குதலுக்குப் பிறகு ரயிலின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததற்கான புகைப்படங்களையும், சேதமடைந்த பெட்டிகளின் வீடியோக்களையும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
இது ஒரு “கொடூரமான” தாக்குதல் என்றும், ரஷ்யா பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது ‘பயங்கரவாதம்’ என்றும் அதிபர் ஸெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக உக்ரைனின் ரயில்வே உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா கிட்டத்தட்ட தினமும் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா தொடர்ந்து பொதுமக்களின் மின்சாரம் மற்றும் எரிவாயு நிலையங்களையும் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருவதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பிராந்திய ஆளுநர் ஒலெக் ஹ்ரிகோரோவ் (Oleh Hryhorov) தெரிவித்துள்ளார்.