இலங்கை அரசாங்கத்தின் பின்னணியில் சுவிஸ்சில் நடைபெறவுள்ள அழகுராணி போட்டியை புறக்கணிப்போம்!
[Thursday, May 23, 2013 11:03 AM]
அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள், இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று எமது இனம் பாரிய அழிவுகளை முள்ளிவாய்க்காலில் சந்தித்து நான்கு ஆண்டுகள் கழிந்தும், இன்றும் அழியா வடுக்களோடு மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துள்ள இவ்வேளையில், எமது கலாச்சாரத்தை சிதைக்கும் நோக்குடன், இலங்கை அரசாங்கம் தனது கைக்கூலிகளால் அழகுராணி போட்டி என்ற பெயரில் பாரிய இனவழிப்பு நடவடிக்கையை புலம்பெயர் நாடுகளில் அரங்கேற்றியுள்ளது
இதன் ஒரு கட்டமாக சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகள் மேற்கொண்டுள்ளனா்.
பெண்களின் மானத்தை கவசமாக போற்றும் எமது இனத்தில், பெண்களின் அழகை விற்பனை பொருளாக்கும் செயற்பாடு தேவைதானா?.
நாளை இந்த அழகிகளாக தெரிவு செய்யப்படும் உங்கள் பிள்ளைகள் உலகில் வாழும் செல்வந்தவர்களால் பலவந்தமாக வாடகை பெண்களாக செயற்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே….
இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கைக்கு துணைபோகாது, உங்கள் பெண்பிள்ளைகளின் எதிகாலத்தை கருத்திற்கொண்டு இத்தகைய நிகழ்வை புறக்கணித்து, எமது இனத்தின் சுகந்திர போராட்டத்திற்கு உரம் சேர்ப்பீர்கள் என நம்புகிறோம்.
நன்றி.
சுவிஸ் மறத்தமிழர்..