-
17 பிப்., 2014
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது நிய+ஸிலாந்து
இந்தியாவுடனான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் அணித் தலைவர் பிரின்டன் மெக்கலமின் சதத்தினால் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துக் கொண்டது.
நியூஸிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்களை பெறுவதற்குள் முதல் நான்கு விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தடுமாறியது.
புலனாய்வு இன்ஸ்பெக்டர் சடலமாக மீட்பு
தனிப்பட்ட குடும்ப தகராறினால் தற்கொலை
நேற்று முன்தினம் மாலை 5.50மணியளவில் தனது உத்தியோகபூர்வ பிஸ்டலை கடமை நிமித்தம் பெற்றுக் கொள்வதாக கூறி எடுத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலைய பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
* அத்துருகிரிய வயல்வெளியில் சடலம்;
* கைத்துப்பாக்கி, மனைவி எழுதிய கடிதமும் கண்டெடுப்பு
உத்தியோகபூர்வமற்ற தேர்தல் அலுவலகங்களை, அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையர் உத்தரவு
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் அலுவலகங்களை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய பொலிஸ் திணைக்களத் திற்கு நேற்று உத்தியோ கபூர்வ அறிவிப்பினை விடுத்துள்ளார்.
இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை கேட்டு நவநீதம்பிள்ளை-இவர் இலங்கை அரசுக்கு எழுதிய அறிக்கை வெளியான மர்மம் என்ன ?
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, வரும் மார்ச் மாத அமர்வில் சிறிலங்கா குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் மறுப்பது ஏன்?
கேர்ணல் ஹரிகரன் இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்ற ஒருவர். அவர் இதற்கு முன்னர் இவ்வாறு கூறியதாக கேள்விப்படவில்லை.
காணாமல் போனோர் பற்றி சர்வதேச விசாரணைக்கு கோரினேன்: ஜெனிவா சென்று திரும்பிய அனந்தி-பி.பி.சி
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பலவற்றையும் ஜெனிவாவில் உள்ள சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்களின் நிலைமைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்துடைப்பு நடவடிக்கை என்று சொல்லத்தக்க வகையிலான உள்ளுர் விசாரணைகள் என்பன தொடர்பாக விபரமாக எடுத்துக் கூறியிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.உடற்பயிற்சி நிலையம் என்ற பெயரில் பாரிய வீடுகளை வாடகைக்கு அமர்த்தி இந்தக் குழுக்கள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகின்றன.
யாழ்.குடாநாடு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் படையினர் சீருடையுடன் ஆயுதங்கள் தாங்கியவாறு எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து எங்களை தாக்கிவிட்டு பிள்ளைகளை கொண்டு சென்றனர்.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே? எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க சாட்சியமளித்துள்ளனர்.
ஆணைக்குழுவின் 2ம் அமர்வு நேற்றய தினம் சாவகச்சேரி பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தபோதே மக்கள் மேற்படி சாட்சியத்தினை கண்ணீர்மல்க வழங்கியிருக்கின்றனர்.
சாட்சியத்தில் மக்கள் கூறுகையில்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)