-
2 பிப்., 2016
மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளாராக விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏன் அறிவிக்கப்படக்கூடாது என்று கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள நான்கு கட்சிகளின் தலைவர்களும் ஏற்கனவே ஒன்றுகூடி, 'முதல்வர் வேட்பாளர்' குறித்து விரிவாக விவாதித்து, தெளிவாக ஒரு முடிவை அறிவித்துள்ளோம். கூட்டணியின் 'குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை' முன்வைத்து மக்களைச் சந்திப்பது என்றும் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை என்றும் ஒருமித்த முடிவெடுத்துள்ளோம். இந்நிலையில், "தலித் ஒருவர் ஏன் தமிழகத்தின் முதல்வராகக் கூடாது?" என்னும் உரையாடல் இப்போது பொதுவெளியில் தொடங்கியுள்ளது. விடுதலைச்சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தோழர் இரவிக்குமார் அவர்கள், 2014 ஆம் ஆண்டு, 'நிறப்பிரிகை' என்னும் தனது இணையப் பக்கத்தில் எழுதியதை அடிப்படையாக வைத்து, இதனைச் சிலர் தற்போதைய சூழலில் கிளறியிருப்பதாகத் தெரிகிறது. 'வடமாநிலங்களில் சுஷில்குமார் ஷிண்டே, மாஞ்ஜி, மாயாவதி போன்றவர்கள் முதல்வராகும் அளவுக்கு அங்கே உட்கட்சி சனநாயகமும் சமூக சனநாயகமும் வளர்ச்சியடைந்துள்ளது; ஆனால், தமிழகத்தில் ஒப்புக்காகவும் அப்படியொரு பேச்சுகூட எழவில்லையே ஏன்?' - என்னும் அடிப்படையில்தான் அவர் அந்தக் கேள்வியை எழுப்பினார். அன்று அதனை எவரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இன்று அதனை ஊதிப் பெருக்கி, மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம் என்னும் ஒரு தோற்றத்தை உருவாக்கிட, சிலர் பெருமுனைப்புக் கொள்கின்றனர். தோழர் இரவிக்குமார் அவர்கள், மக்கள் நலக் கூட்டணி உருவாவதற்கு முன்பே, 2014 இல் பொதுவெளியில் எழுப்பிய இந்த சனநாயகக் குரலை, இன்று எமது கூட்டணிக்கு எதிராக எழுப்பப்பட்ட போர்க்குரலாகத் திரித்துக் கூற முயற்சிக்கின்றனர். காலம் காலமாக தமிழக அரசியலில் தொடரும் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் தலித்துக்களின் மீதான அரசியல் சுரண்டலுக்கு எதிராகவும் உரையாட வேண்டிய சனநாயக சக்திகளும் இதனைத் தலித்துக்களுக்கு எதிராகவே திருப்பிவிட துடிக்கின்றனர் என்பது அதிர்ச்சியாகவுள்ளது. இதிலிருந்து, இன்னும் தமிழகத்தில் சாதியத்தைச் சாடுவதற்கும் கூட சனநாயகக் கூறுகள் வலிமை பெறவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மக்கள் நலக் கூட்டணியில் தேர்தலுக்கு முன்பே 'முதல்வர் வேட்பாளர்' என்கிற கேள்விக்கே இடமில்லை. இந்த ஒருமித்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். கூட்டணியை வலுவான மாற்று சக்தியாக முன்னெடுத்துச் செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளர் சர்ச்சை: திருமாவளவன் விளக்கம்!
மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளாராக விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏன்
1 பிப்., 2016
யோஷிதவை பார்வையிட மஹிந்த குடும்பத்துடன் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர்
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஷவை ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற
கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் 13 உணவகங்களுக்கு எதிராக வழக்கு
கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இயங்கி வந்த 13 உணவகங்கள் மீது கொழும்பு மாநகர சபையினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக
ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும்: துருக்கி எச்சரிக்கை
துருக்கி வான்பகுதியில் ரஷ்ய விமானம் மீண்டும் அத்துமீறி நுழைந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள துருக்கி அரசு, இதுபோன்ற சம்பவங்கள்
இலங்கை ஓர் சமஷ்டி குடியரசாக இருக்க வேண்டும்! வெளிவந்தது த. ம. பேரவையின் அரசியல் தீர்வு (வரைபு இணைப்பு)
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம்
10 நாட்களில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையாவர்!- அற்புதம்மாள் நம்பிக்கை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை இன்னும் 10 நாட்களில் ஜெயலலிதா விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக பேரறிவாளனின்
31 ஜன., 2016
பழ.கருப்பையா... நீங்க நல்லவரா... கெட்டவரா?
‘கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக் கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு
தமிழகத்தில் 5 அணிகள் போட்டியிடப்போவது உறுதி: ராமதாஸ் பேட்டி
ததிருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இன்று (ஞாயிறு) பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
பழ.கருப்பையாவை சந்தித்துப் பேசிய வைகோ
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையாவை சந்தித்துப் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
யார் எவ்வாறான கோரிக்கை விடுத்தாலும் வேண்டுகோள்களை முன்வைத்தாலும் அரசியல் அமைப்பில் சமஸ்டி முறைமையிலான ஆட்சிக்கு இடமில்லை
அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையில் முழு இரவையும் தூங்காமல் கழித்த யோசித்த
வரும் பதின்மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள யோசித உள்ளிட்ட ஐவரும் கொழும்பு வெலிகடை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)