புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2015

போக்குவரத்துத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஊதிய ஒப்பந்தம்,பணி நிரந்தரம் மற்றும் நிலுவைத் தொகை  உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 28 ஆம் தேதி

முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று(புதன் கிழமை) போக்குவரத்து  துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் சென்னையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடை பெற்றது.



நேற்று மாலை தொழிலாளர் நலத்துறை சிறப்பு துணை ஆணையர் யாஸ்மின் பேகம், சென்னை போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆல்பர்ட் தினகரன் முன்னிலையில், வேலை நிறுத்த போராட்டம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக்  கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ். உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஆனாலும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
                                                                                              


இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன், தொழி்ற்சங்கத்தினர் இன்று காலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு. தலைவர் அ.சௌந்திரராஜன், போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுவிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது என்றும், கோரிக்கைகள் குறித்து பேச குழு அமைக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும் பிரதான கோரிக்கைகள் குறித்து பேசலாம் எனவும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்து செளந்திரராஜன், இதனால் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகவும் கூறினார்.

கடந்த 4 நாட்களாக நடை பெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம்  தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பேருந்துகளை இயக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இன்று மாலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் முழு வீச்சில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொலை தூரங்களுக்கு செல்லும் பேருந்துகளின் சேவை தொடங்கும் என்பதால் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்காக முன்கூட்டியே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வோர் நிம்மதி அடைந்துள்ளனர்.

ad

ad