செவ்வாய், ஜனவரி 20, 2015

ஜனாதிபதி மைத்திரிபால இராஜினாமா


 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று  இராஜினாமா செய்துள்ளார்.

தற்பொழுது நடைபெற்று வரும் புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இராஜினாமாக் கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.
பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான மைத்ரிபால சிறிசேன, தற்போது நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.