வியாழன், ஜனவரி 01, 2015

அமைச்சர் பசிலின் கோட்டைக்குள் மைத்திரி,சந்திரிகாவின் பழைய கோட்டையின் செல்வாக்கை பிடித்தாரா ?

சந்திரிகாவின் பழைய கோட்டையின் செல்வாக்கை பிடித்தாரா ?அமைச்சர் பசிலின் கோட்டைக்குள் மைத்திரி! ஆளுங்கட்சி ஆட்டம் காணத் தொடங்குகின்றது
அமைச்சர் பசில் ராஜபக்சவின் கோட்டையாக கருதப்படும் கம்பஹாவில் இன்று பொது வேட்பாளர் மைத்திரியின் பிரசாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் சகோதரரும், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சருமான பசில் ராஜபக்ச கம்பஹா மாவட்டத் தலைவராக இருக்கின்றார்.
இதன் காரணமாக அங்கு நடைபெறும் மைத்திரியின் கூட்டத்துக்கு பொதுமக்கள் பெருமளவில் வருகை தருவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்தபடி புத்தாண்டு தினமான இன்று அதிகாலை முதல் கம்பஹா பிரதேசத்தின் பல பகுதிகளிலும் மைத்திரியை வரவேற்கும் பதாதைகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
பிரதேசம் முழுவதும் விழாக் கோலம் பூண்டு ஆதரவாளர்கள் மைத்திரியை வரவேற்க காத்திருக்கின்றனர்.

மேலும் இன்று நடைபெறும் கம்பஹா பிரச்சாரக் கூட்டத்தில் ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.