புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2013

 ஆழிப்பேரலை; முல்லை மக்கள் கண்ணீருடன் அஞ்சலி
2004 இல் ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளை முல்லைத்தீவு மக்கள் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தனர்.


இன்று மாலை 4 மணியளவில் மாமூலை நெடுங்கேணி வீதியில், உயிரிழந்தோர் விதைக்கப்பட்ட இடத்தில், நினைவு கூரும் நிகழ்வு பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் இடம்பெற்றது.

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொதுச் சுடரேற்றி  நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த  மக்கள் தம் உறவுகளுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

சுடர்களை ஏற்றியதோடு உணவுப்படையல்களையும் வைத்து அவர்கள் கதறி அழுதமை மிகவும் உருக்கமாக இருந்தது.

இதே வேளை இன்று காலையில் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில்  மும்மத வழிபாடுகளோடு ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகள் நினைவு கூறப்பட்டனர்.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன், உதவிப்பிரதேசச் செயலர் குருபரன் , நீதவான் அலேக்ஸ்ராஜா உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.






 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=674132538327887668#sthash.Y99r4Qku.dpuf

ad

ad